VIDEO: ‘இப்படியொரு ரூல்ஸ் இருக்கா..!’.. நடையை கட்டிய சூர்யகுமார்.. ஆனா கடைசியில் 3-வது அம்பயர் வச்ச ட்விஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடந்து முடித்த முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியைப் பொறுத்தவரை தனஞ்ஜெயா மற்றும் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளும், சமீரா 2 விக்கெட்டுகளும், கருணாரத்னே மற்றும் ஷானகா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஆவிஷ்கா ஃபெர்னாண்டோ 76 ரன்களும், பனுகா ராஜபக்சே 65 ரன்களும் எடுத்தனர். ஆனாலும் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று, இந்திய அணி கோப்பையை கைற்றியது.

இந்த நிலையில் இப்போட்டியில் மூன்றாம் அம்பயர் கொடுத்த நாட் அவுட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இந்திய அணி பேட்டிங் செய்த போது, இலங்கை வீரர் ஜெயவிக்ரமா வீசிய 23-வது ஓவரில் சூர்யகுமார் யாதவின் காலில் பட்டு பந்து சென்றது. அதனால் அம்பயர் எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார். இதனால் சிறிது நேரம் யோசித்த சூர்யகுமார் யாதவ், உடனே மூன்றாம் அம்பயரிடம் ரியூவி (DRS) கேட்டார்.

அப்போது பந்து ஸ்டம்பில் படுவதுபோல் காண்பிக்கப்பட்டதால், அவுட் என நினைத்து இலங்கை வீரர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். உடனே சூர்யகுமார் யாதவும் பெவிலியன் திரும்பினார். ஆனால் மூன்றாம் அம்பயர் அதை நாட் அவுட் எனக் கொடுத்தார். இதனை அடுத்து கள அம்பயர் சூர்யகுமார் யாதவை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், பந்து சூர்யகுமார் காலில் படும்போது அவர் ஸ்டம்பில் இருந்து 2.5 மீட்டர் தூரத்துக்கு காலை வைத்திருந்தார். ஐசிசி விதிகளின்படி பேட்ஸ்மேன் இவ்வளவு தூரத்துக்கு காலை வைத்துள்ளபோது பந்து பட்டால் எல்பிடபுள்யூ அவுட் கொடுக்க இயலாது. அதைதான் இப்போட்டியில் மூன்றாம் அம்பயர் செய்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்