‘மேட்சுக்கு இன்னும் 1 நாள்தான் இருக்கு’!.. திடீரென விலகிய இலங்கை வீரர்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை வீரர்கள் இருவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இலங்கை அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டி ஆரம்பிக்கும் தேதிகள் மாற்றப்பட்டன.

அதன்படி, நாளை மறுநாள் (18.07.2021) முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20-ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23-ம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25-ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27-ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குசல் பெரேரா, இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில், ‘பயிற்சியின்போது குசல் பெரேராவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவர் விளையாடமாட்டார்’ என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டேவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், ஒருநாள் தொடரில் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சம்பள பிரச்சனை காரணமாக சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் விலகியுள்ள நிலையில், காயம் காரணமாக அடுத்தடுத்து வீரர்கள் விலகி வருவது இலங்கை அணிக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்