க்ருணால் பாண்ட்யாவால் இந்திய அணிக்கு வந்த சிக்கல்.. விளையாட முடியாத நிலையில் 8 வீரர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

க்ருணால் பாண்ட்யாவால் இந்திய அணிக்கு வந்த சிக்கல்.. விளையாட முடியாத நிலையில் 8 வீரர்கள்..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (28-07-2021) நடைபெற உள்ள 2-வது டி20 போட்டியில் இந்த 8 வீரர்களும் களமிறங்க மாட்டார்கள் என சொல்லப்படுகிறது.

SL vs IND: Krunal Pandya’s eight close contacts test negative

இதனால் 2-வது டி20 போட்டியில் க்ருணால் பாண்ட்யா உட்பட 9 வீரர்கள் தவிர மற்ற வீரர்கள்தான் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது. இலங்கை பயணத்துக்கு 20 வீரர்கள் கொண்ட அணியும், வலைப்பயிற்சிக்காக 4 பந்துவீச்சாளர்களும் சென்றுள்ளனர்.

SL vs IND: Krunal Pandya’s eight close contacts test negative

இலங்கை நாட்டின் கொரோனா தடுப்பு விதிகளின்படி, க்ருணால் பாண்ட்யா வரும் 30-ம் தேதி இந்திய அணியுடன் நாடு திரும்ப முடியாது. க்ருணால் பாண்ட்யா தனது தனிமைப்படுத்தும் காலத்தை முடித்து, கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தபின்புதான் அவரால் இந்தியா வர முடியும்.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘க்ருணால் பாண்ட்யாவுக்கு அறிகுறியில்லாத கொரோனா தொற்று ஏற்பட்டு வறட்டு இருமலும், தொண்டை வலியும் இருந்தது. இதனால் உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக அடுத்த இரு டி20 போட்டிகளிலும் க்ருணால் பாண்ட்யா விளையாடமாாட்டார்’ என கூறப்பட்டுள்ளது. அதனால் க்ருணால் பாண்ட்யாவுக்கு பதிலாக ராகுல் சஹார் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்