திடீர் நெஞ்சு வலி.. கிரவுண்டில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர்.. மருத்துவமனையில் அனுமதி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இலங்கை வீரர் நெஞ்சு வலியால் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஷாப்பிங் மாலில் இருந்து கால் தவறி கீழே விழுந்த இளம்பெண்.. பிறந்த நாள் பரிசு வாங்க சென்றபோது நடந்த சோகம்..!

வங்க தேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டியின் 23-வது ஓவரில் இலங்கை வீரர் குஷால் மெண்டீஸ் திடீரென மைதானத்தில் கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே காலை முதல் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும் என்று வங்கதேச அணி கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் குஷால் மெண்டீஸ் முதல் இன்னிங்ஸில் அரைசதமும், இரண்டாவது இன்னிங்ஸில் 48 ரன்களும் எடுத்து போட்டி டிரா செய்ய முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மயக்கம் தெளிந்ததும் சொன்ன பதில்.. களேபரம் ஆன கல்யாண வீடு..!

CRICKET, KUSAL MENDIS, CHEST PAINS, HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்