பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடையா??.. இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு??.. வெளியான பரபரப்பு தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை கிரிக்கெட் வீரருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் வைத்து டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்திருந்தது. இதில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இரண்டாவது முறையாக டி 20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
தசுன் சனகா தலைமயிலான இலங்கை அணி, சூப்பர் 12 சுற்று வரை முன்னேறி இருந்தது. இதில், நான்காவது இடம் பிடித்த இலங்கை அணி, அரை இறுதிக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தது.
உலக கோப்பை தொடர் ஆரம்பமான சமயத்தில், இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டிருந்தது இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருந்தது. இது தொடர்பாக அவர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியமும் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், மற்றும் ஒரு இலங்கை கிரிக்கெட் வீரர் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலக கோப்பைத் தொடரில், சமிகா கருணாரத்னே இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது, உலக கோப்பையில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை சமிகா கருணாரத்னே மீறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு பிறகு, அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள தகவலின் படி, விதிமுறைகளை மீறியதால் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க, சமிகா கருணாரத்னேவுக்கு ஒரு வருடம் தடை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது. இருப்பினும் அவர் எந்த விதிமுறைகளை மீறினார் என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியிடவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. ஒரு வருட தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தற்காலிக தடை என்பதால், சர்வதேச அளவில் பிறகு விளையாட அனுமதிக்கப்படுவார் என்றும் ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் உள்நாட்டு தொடருக்கான இலங்கை அணியில் இருந்து கருணாரத்னே நீக்கப்படுவார் என்றும் கருதப்படுகிறது. அதே வேளையில், சாமிகா கருணாரத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சார் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளது.
Also Read | பங்களாதேஷ் தொடரிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.. "இது தான் காரணமா?".. பிசிசிஐயின் Official லிஸ்ட் இது தான்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவர் பேட்டிங்கை பாக்கவே சங்கடமா இருக்கு".. சூரிய குமாரின் அதிரடியை பார்த்து அசந்துபோன மேக்ஸ்வெல்..!
- "நான் ஒன்னும் கிரிமினல் இல்லை, இப்டி பண்றது".. மனம் உடைந்து பேசிய டேவிட் வார்னர்.. என்ன நடந்துச்சு?
- பிரதமர் மோடியிடம் முதன்முதலில் ஜடேஜாவை அறிமுகம் செய்துவைத்த தோனி.. உடனே பிரதமர் சொன்ன விஷயம்.. மனம் திறந்த ஜடேஜா..!
- "தாய் பாசத்துக்கு எதுவும் ஈடாகாது".. சூர்யகுமார் செஞ்சுரி அடிச்சதும் அம்மா செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!
- சிஎஸ்கே அணி விடுவித்த பிறகு.. அடேங்கப்பா லெவலில் சாதனை படைச்ச ஜெகதீசன்.. CSK பகிர்ந்த வைரல் ட்வீட்!!
- "எல்லா ரெக்கார்டும் இனி நம்ம பேருல தான்".. 50 ஓவர் போட்டியில் 200+ ரன்கள்.. தமிழக வீரர் ஜெகதீசனின் அசாத்திய சாதனை!!
- "எல்லா இடத்துலயும் அவரு இருக்காருங்க".. தோனி குறித்து கோலியின் வைரல் பதிவு!!
- "நீங்க நிஜமா அப்டி நெனச்சீங்களா?".. அஸ்வின் விஷயத்தில் பரவிய வதந்தி??.. ராஜஸ்தான் அணியின் தரமான பதிலடி!!
- "எதுக்கு இவ்ளோ பிரேக்?".. ராகுல் டிராவிட் விஷயத்தில் ரவி சாஸ்திரி சொன்ன பரபரப்பு கருத்து!!
- "ஃபீல்டிங் பண்ண சொன்னா மனுஷன் என்னய்யா பண்ணி இருக்காரு ?".. பவுண்டரி லைனில் சாகசம் செய்த ஆஸி. வீரர்.. சர்ப்ரைஸ் வீடியோ!!