ஐபிஎல் மெகா ஏலம் : 'சிஎஸ்கே' டீம்'ல இந்த 3 பேர் ஆடுனா செமயா இருக்கும்'ல.. சிவகார்த்திகேயன் போட்ட லிஸ்ட்.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பாக, மெகா ஏலம், நாளை தொடங்கி இரு தினங்கள், பெங்களூரில் வைத்து நடைபெறவுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பைப் போலவே, இதன் ஏலத்தையும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதற்கு மிக முக்கிய காரணம், இந்த முறை அனைத்து அணிகளும் பெருவாரியான வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் வாங்கவுள்ளது தான்.

புதிய அணிகள்

அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள், இந்த முறை ஐபிஎல் பந்தயத்தில் புதிதாக களமிறங்குகிறது. அந்த இரண்டு அணிகளும், தலா 3 வீரர்களை அணியில் தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், மற்ற 8 அணிகளும் 2 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இறுதி பட்டியல்

10 அணிகளும், மீதமுள்ள வீரர்களை இந்த ஏலத்தில் எடுக்கவுள்ளதால், ஒவ்வொரு அணிகளும் எப்படிப்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் என்பது பற்றி, அதிக அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீப காலமாக, இளம் வீரர்களும் அதிக உள்ளூர் தொடர்களில் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். அவர்களின் பெயருடன், மொத்தம் 590 வீரர்கள் பெயர், ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

திட்டம் போடும் ஐபிஎல் அணிகள்

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய வீரர்களை அணியில் இணைத்துக் கொள்ள, நிச்சயம் சில அணிகள், மாறி மாறி போட்டி போடும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதே போல, எந்தெந்த வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றியும், கடந்த சில நாட்களாக அனைத்து அணி நிர்வாகமும், தீவிரமாக திட்டம் போட்டு வருகிறது.

ரசிகர்கள் விருப்பம்

அது மட்டுமில்லாமல், சில முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள், எந்த வீரர்களை ஒவ்வொரு அணியும் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றியும், அணிகளுக்கு ஆலோசனை செய்து வருகின்றனர். அதே போல, ரசிகர்களும் தங்களின் ஃபேவரைட் அணிகளில், சில வீரர்கள் ஆட வேண்டும் என்பதை பற்றியும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் லிஸ்ட்

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டியளித்துள்ளார். அதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த 3 வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது பற்றி, தன்னுடைய விருப்பத்தினை சிவகார்த்திகேயன் பதிவு செய்துள்ளார்.

என்னுடைய '3' ஃபேவரைட்

'ஐபிஎல் ஏலத்தை பற்றித் தான் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தற்போது பேசிக் கொண்டிருக்கின்றனர். சிஎஸ்கே அணியில் எந்த 3 வீரர்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என அஸ்வின் என்னிடம் கேட்டார். என்னுடைய தனிப்பட்ட கருத்தின் படி, நமது சென்னை வீரர்கள், மஞ்சள் நிற ஜெர்சியில் ஆடினால், சிறப்பாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

அந்த வகையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக ஆட வேண்டும். அவருடைய அனுபவம், நிச்சயம் சிஎஸ்கே அணிக்குக் கை கொடுக்கும். அடுத்தது, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். அவர் சிஎஸ்கே அணியில் இடம்பெற வேண்டும். கடைசியாக, மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான். அதிரடி வீரரான இவர், சிஎஸ்கே அணியில் இடம்பெற்று, அதிரடியாக ஆட வேண்டும் என நான் விரும்புகிறேன். இவர்கள் மூன்று பேரும், மஞ்சள் நிற ஜெர்சியில், சிஎஸ்கே அணிக்காக ஆட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்' என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே முடிவு என்ன?

சிவகார்த்திகேயன் கூறியது போலவே, தமிழக வீரர்கள் சிலரை சிஎஸ்கே அணியில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால், சிஎஸ்கே அணியும் அப்படி ஒரு திட்டத்துடன் தயாராக இருக்கிறதா என்பதை நாளை தொடங்கும் ஐபிஎல் ஏலத்தின் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும்.

RAVICHANDRAN ASHWIN, CHENNAI-SUPER-KINGS, SIVAKARTHIKEYAN, NATARAJAN, SHAHRUKHKHAN, IPL AUCTION 2022, DHONI, ரவிச்சந்திரன் அஸ்வின், சிவகார்த்திகேயன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்