"நான் 'இந்தியா' 'டீம்'ல ஆடுறது தான் 'அப்பா'வோட 'கனவா' இருந்துச்சு... அவருக்காக நான் செய்யணும்னு நெனைக்குற 'அஞ்சலி' இதான்!!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகள் விளையாடவுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளார்.

இதற்காக அவர் ஆஸ்திரேலியாவில் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரது தந்தை திடீரென மரணமடைந்தார். இதனால் சிராஜ் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அவரால் குவாரன்டைன் விதிமுறைகள் காரணமாக உடனடியாக இந்தியா திரும்ப முடியவில்லை.

தான் மிகவும் நேசித்த மரணம் தன்னை அதிகம் நொறுங்க செய்த நிலையில், சிராஜின் மூத்த சகோரரான முகமது இஸ்மாயில் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 'எங்களது குடும்பத்தில் சிராஜ் கடைகுட்டி என்பதால், தந்தை மற்றவர்களை விட அவர் மீது தான் அதிக அன்பு வைத்திருந்தார். சிராஜும் தந்தையை அதிகம் நேசித்திருந்தார். தந்தை இறந்த செய்தியைக் கேட்டதும் சிராஜ் நொறுங்கி போனார். உடனடியாக அவர் இந்தியா திரும்ப எண்ணினார். ஆனால், நான் தான் அவரை அங்கேயே இருக்கும்படி சொன்னேன். இப்போது அழைத்து பேசினாலும் அழுது கொண்டே தான் இருக்கிறார். ஒரு வார்த்தை கூட சிராஜால் பேச முடியவில்லை.

நானும் மனமுடைந்து போயுள்ளேன். ஆனால் எனதருகில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளனர். ஆனால் சிராஜ் அருகே யாருமில்லை. நான் அடிக்கடி அவருக்கு அழைத்து ஆறுதல் அளித்து வருகிறேன். நான் இந்திய அணியின் மேனேஜரிடம் தொடர்பில் உள்ளேன். இந்நேரத்தில், சிராஜுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மற்ற அணி வீரர்களும் சிராஜை அதிகமாக தேற்றி வருகின்றனர். 

இந்த நேரத்தில் சிராஜுக்கு அது தான் அதிகம் தேவைப்படுகிறது. அதே போல, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் சிறப்பாக ஆடி இந்திய அணி தொடரை வென்று அதனைத் தனது தந்தைக்கு அஞ்சலியாக செலுத்தவுள்ளதாக சிராஜ் உறுதியளித்துள்ளார்' என முகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்