விறுவிறுப்பாக சென்ற மேட்ச்.. சிராஜ் செயலால் நேர்ந்த அதிர்ச்சி.. மைதானத்தில் பரபரப்பு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளது.

Advertising
>
Advertising

கடந்த பாக்சிங் டே அன்று ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 327 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டான நிலையில், தெனாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில், 197 ரன்களுக்கு சுருண்டது.

ஒமைக்ரான் தொற்று லேசானது தான்.. பெருசா ஆக்சிஜன் தேவை இருக்காது.. அறிவுறுத்திய எய்ம்ஸ் இயக்குனர்

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு, 305 ரன்கள், இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்களை தென்னாப்பிரிக்க அணி எடுத்திருந்தது.

கடைசி நாள்

இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்புகள் இருந்த நிலையில், கடைசி நாள்  போட்டி இன்று ஆரம்பமானது. இதில், தென்னாபிரிக்க அணி, சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மதிய உணவு இடைவேளைக்கு முன் 7 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி, மீதமுள்ள 3 விக்கெட்டுகளை இடைவேளைக்கு பிறகு வந்த வேகத்தில் இழந்தது.

இந்திய அணி வெற்றி

இதனால், இந்திய அணி, 113 ரன்கள் வித்தியாசத்தில், செஞ்சுரியன் மைதானத்தில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், மழை குறுக்கிடலாம் என கூறப்பட்டது. ஆனால், இந்திய அணி வேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி, அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது.

போட்டியை நிறுத்திய அஸ்வின்.. நடுவரை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?

சிராஜ் செயலால் அதிர்ச்சி

இதனிடையே, இந்திய அணி வீரர் சிராஜ் பந்து வீசிய போது நடந்து சம்பவம் ஒன்று, போட்டிக்கு நடுவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இன்னிங்ஸின் 62 ஆவது ஓவரை சிராஜ் வீசினார். அப்போது பந்தை எதிர்கொண்ட பாவுமா, அதனை டிஃபன்ஸ் செய்தார். இந்த பந்து, நேராக சிராஜ் கைக்குச் சென்றது. பாவுமா கிரீஸுக்கு வெளியே நிற்பதாக கருதிய சிராஜ், பந்தைப் பிடித்த வேகத்தில் ஸ்டம்பை நோக்கி எறிந்தார்.

காயமடைந்த பாவுமா

இது நேரடியாக, பாவுமாவின் காலில் வேகமாக தாக்கியது. இதனை சற்றும் எதிர்பாராத பாவுமா, உடனடியாக நிலை குலைந்து போனார். வலியால் துடி துடித்த அவர், கீழே உட்கார்ந்தார். இதனால், போட்டிக்கு நடுவே சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.  சிராஜும், பாவுமா அருகே சென்று மன்னிப்பு கேட்டு, அவருக்கு ஆறுதல் சொன்னதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தென்னாபிரிக்க அணியின் பிசியோ, அங்கு வந்து, காயத்தை பரிசோதித்து விட்டுச் சென்றார்.

பும்ரா கிண்டல்

சில நிமிடங்கள் நின்ற போட்டி, பின்னர் மீண்டும் தொடங்கியது. இதனிடையே, இந்திய வீரர்கள், சிராஜின் செயலுக்கு கிண்டல் செய்துள்ளனர். அப்போது, மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அவர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் என ஸ்டம்பில் மைக் இருப்பதை நக்கலாக குறிப்பிட்டார்.இது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

 

 

SIRAJ, BAVUMA, THROWS BALL BACK, ANKLE, சிராஜ், பாக்சிங் டே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்