"சேட்டை புடிச்ச ஆளுயா இந்த சிராஜ்".. வங்காளதேச வீரரை அவுட் எடுக்குறதுக்கு முன்னாடி.. மைதானத்தில் சொன்ன வார்த்தை.. அல்டிமேட்டு 😅!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து தொடரை முடித்த கையோடு வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, அங்கே தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "தூங்குறது மகாராஷ்டிரால, சமைக்குறது தெலுங்கானால".. வீட்டின் குறுக்கே செல்லும் மாநில எல்லைகள்!!.. வியக்க வைக்கும் பின்னணி!!

இதற்கு முன்பாக, இந்தியா மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணிகள், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி இருந்தது.

இதன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வங்காளதேச அணி, இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தது. தொடர்ந்து நடந்த 3 ஆவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக, இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் போட்டியில், மூன்று நாட்கள் முடிவடைந்துள்ளது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய அதன்படி ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 404 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி, 150 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் பின்னர், ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்சில் முதலில் ஆடிய இந்திய அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது. சுப்மன் கில் 110 ரன்களும், புஜாரா 102 ரன்கள் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

513 ரன்கள் என்ற இலக்குடன் ஆடி வரும் வங்காளதேச அணி, 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. இதனிடையே, இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது வங்காளதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், இந்திய வீரர் சிராஜுக்கும், வங்காளதேச வீரர் லிட்டன் தாஸுக்கும் சிறிய வாக்குவாதம் நடந்தது.

அப்போது சிராஜ் சில கருத்துக்களை தெரிவிக்க, அது தன் காதில் எதுவும் கேட்கவில்லை என்பது போல சைகை காட்டினார் லிட்டன் தாஸ். இதற்கடுத்த பந்தில், லிட்டன் தாஸ் போல்டு அவுட்டாக, உடனடியாக சிராஜும் தனது வாயில் விரல் வைத்து சத்தம் போடாமல் இருக்கும் படி சைகை காட்டினார். மறுபக்கம், கோலி கூட தனது பாணியில் லிட்டன் தாஸ் செய்ததை மீண்டும் செய்து காட்டி, லிட்டன் தாஸை வழியனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியல் அதிக கவனம் ஈர்த்திருந்தது. அப்படி ஒரு சூழலில், லிட்டன் தாஸிடம் தான் தெரிவித்தது என்ன என்பது பற்றி சிராஜ் சில கருத்துக்களைத் கூறி உள்ளார்.

பேட்டிங் செய்து கொண்டிருந்த லிட்டன் தாஸ், அடுத்தடுத்து சில பவுண்டரிகளை விரட்டிக் கொண்டிருந்தார். அப்போது பந்து வீச வந்த சிராஜ், லிட்டன் தாஸிடம் பேசிய விஷயம் பற்றி கூறுகையில், "வேறு எதுவும் பேசவில்லை. நான் அவரிடம் இது டி 20 போட்டி இல்லை. இது டெஸ்ட் கிரிக்கெட். சற்று நிதானமாக ஆடுங்கள்" என கூறியதாக சிராஜ் தெரிவித்துள்ளார். இப்படி சிராஜ் கூறிய அடுத்த பந்திலேயே லிட்டன் தாஸ் அவுட்டாகி போனது குறிப்பிடத்தக்கது.

Also Read | 16 ஆவது நாள் காரியத்தின் போது.. லட்சுமி யானையின் கால் தடம் தென்பட்டதா?.. பரபரப்பு சம்பவம்!!

CRICKET, SIRAJ, LITTON DAS, WICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்