"வாழ்க்க ஒரு வட்டம் தம்பிங்களா..." வெச்சு செஞ்சவங்களுக்கு எல்லாம்... 'வேற' லெவல் 'பதிலடி' கொடுத்து அசத்திய 'பவுலர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வரும் நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்நிலையில், கொல்கத்தா அணி தற்போது 5 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்து தவித்து வருகிறது. முதல் 6 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணி அடித்திருந்த நிலையில், பவர் பிளே ஓவர்களில் இந்த சீசனில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவானது. பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் மூன்று ஓவர்கள் பந்து வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில், முதல் 2 ஓவர்களை மெய்டனாக வீசி 3 விக்கெட்டுகளை அள்ளினார். 





 

ஐபிஎல் வரலாற்றில் 2 ஓவர்கள் மெய்டன் வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையும் சிராஜ் படைத்தார். முன்னதாக, போட்டிக்கு முன்னர் அவர் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில், இவரை ஏன் அணியில் கோலி எடுத்தார். நிறைய ரன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார் என அனைவரும் கிண்டல் செய்தனர். 



 

ஆனால், அனைவரையும் வாயை அடைக்கும் விதமாக சிராஜ் சிறப்பாக பந்து வீசி அசத்தியுள்ளார் அவர். இதனைத் தொடர்ந்து, தற்போது அவரை பாராட்டும் விதமாக மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்