'ஆர்.சி.பி'யவா கலாய்க்குற'...'உன்ன கொன்னுருவேன்'...இவருக்கா இப்படி மிரட்டல் வரணும்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் ஒரு அணிக்கு மட்டும் சோகம் தொடர்ந்து துரத்தி வருகிறது.அந்த அணி தான் ஆர்.சி.பி.இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால்,நெட்டிசன்கள் பலமாக கலாய்த்து வருகிறார்கள்.

'ஆர்.சி.பி'யவா கலாய்க்குற'...'உன்ன கொன்னுருவேன்'...இவருக்கா இப்படி மிரட்டல் வரணும்?

இந்நிலையில் ஆர்சிபி பற்றி குறைக் கூறினால் கொன்றுவிடுவேன் என்று,முன்னாள் வீரரும்,தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வருபவருமான சைமன் டவுல்க்கு ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.ஆனால் இதனை மிகவும் கூலாக சமாளித்த  சைமன் 'நான் இந்த மிரட்டலுக்காக என்ன செய்தேன் என்று தெரியவில்லை. இது வெறும் கிரிக்கெட் நண்பா. அமைதியாக இருங்கள்'என பக்குவமாக பதிலளித்துள்ளார்.

இதனிடையே ரசிகர்கள் பலரும் சைமன் டவுலுக்கு ஆறுதலாக தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி என்பதை,ரசிகர்கள் புரிந்து கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என பல ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கொலை மிரட்டல் விடுத்த நபர் எந்த சம்பவத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை.தொடர்ந்து ஆர்சிபி தோல்வியை தழுவி வருவதால் பலரும் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.எனவே அந்த அழுத்தத்தின் வெளிப்பாடாகவே அந்த ரசிகர் இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருக்கலாம் என கருதப்படுகிறது.

IPL2019, IPL, ROYAL-CHALLENGERS-BANGLORE, SIMON DOULL, RCB FAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்