"ப்பா, இப்படி கேட்ச் புடிக்குறது ரொம்ப கஷ்டம்'ங்க.." பறவையாய் மாறிய இளம் வீரர்.. உறைந்து போன ரசிகர்கள்.. வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் நேற்றைய போட்டியில் மோதின.

Advertising
>
Advertising

இந்த போட்டியில், லக்னோ அணியை வீழ்த்தி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றிருந்தது.

இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது.

களை கட்டப் போகும் ஐபிஎல்

தீபக் ஹூடா 55 ரன்களும், அறிமுக இளம் வீரர் ஆயுஷ் படோனி 54 ரன்களும் எடுத்து அசத்தி இருந்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில், அனைத்து வீரர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்க, இரண்டு பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டிப் பிடித்தது. குஜராத் அணியின் பேட்டிங் வரிசையை துவம்சம் செய்த லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றார்.

புதிய அணிகளின் ஆட்டமும் விறுவிறுப்புடன் தொடங்கி உள்ளதால், இந்த ஐபிஎல் தொடர் முழுக்க களை கட்டும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இளம் வீரரின் அசத்தல் கேட்ச்

இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் இடையே மோதிய போட்டியின் போது, இளம் வீரர் பிடித்த அசத்தல் கேட்ச் தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி, பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, தொடக்க ஜோடியான ராகுல் மற்றும் டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார் ஷமி. இதனால், லக்னோ அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்டது. இதனையடுத்து, நான்காவது ஓவரில் எவின் லீவிஸ் அடித்த பந்து ஒன்று, மிட் ஆஃப் திசையில் வேகமாக உயர்ந்து சென்றது.

ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

அப்போது, அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற இளம் வீரர் சுப்மன் கில், பின்னோக்கி வேகமாக ஓடிச் சென்றார். அவரது முன்பு பந்து சென்ற நிலையில், கைக்கு எட்டாது என்பதை உணர்ந்த கில், வேகமாக பறந்து பறவையாக மாறி கேட்சை பிடித்து விழுந்தார் அவர். இதனைக் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு நிமிடம் ஆச்சாரியத்தில் உறைந்து போயினர். நிச்சயம், கேட்ச் இல்லை என்பது போல தோன்றிய நிலையில், கில்லின் அற்புதமான ஃபீல்டிங், லக்னோ அணிக்கு தலைவலியாக மாறி, 20 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டையும் இழக்கச் செய்தது.

 

சுப்மன் கில் பிடித்த கேட்ச் தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

SHUBMAN GILL, EVIN LEWIS, LSG VS GT, SHAMI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்