5 ரன்னுக்கு '3 விக்கெட்' காலி... 'அந்த' ரெண்டு பேரும் 'டக் அவுட்'... பயிற்சி 'ஆட்டத்திலேயே' இப்டியா?... விளாசும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியும் வென்றது. இரண்டு தொடர்களிலும் இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஒயிட்வாஷ் ஆகின. இதனால் இந்த இரண்டு அணிகளில் டெஸ்ட் தொடரை வெல்லப்போவது யார்? என்ற கேள்வியும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் ஒருசேர எழுந்துள்ளன.

இந்த நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரு அணிகளும் இன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் பிரித்வி ஷா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால் மூவரும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

அதிலும் பிரித்வி ஷா, ஷுப்மன் கில் இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். மயங்க் அகர்வால் 1 ரன்னுக்கு அவுட் ஆகினார். இன்றைய ஆட்டத்தை வைத்து டெஸ்ட் அணிக்கான ஓபனிங் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யலாம் என இருந்த இந்திய அணிக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 18 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

எனினும் புஜாரா, ஹனுமான் விஹாரி இருவரும் நிலைத்து நின்று இந்திய அணிக்கு சற்று வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதிகபட்சமாக புஜாரா 93 ரன்களும், விஹாரி 101 ரன்களும் எடுத்தனர். விஹாரி ரிட்டையர்ட் ஹர்ட் வெளியேறினார். முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு  263 ரன்களை எடுத்தது.

பிரித்வி ஷா, கில், அகர்வால் மூவருமே இன்றைய ஆட்டத்தில் படுபயங்கரமாக சொதப்பி இருப்பதால், டெஸ்ட் போட்டியில் யாரை ஓபனிங் இறக்கி விடுவது? என்ற குழப்பம் தற்போது தேர்வுக்குழுவினர் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இளம்வீரர்களின் மோசமான இந்த ஆட்டத்தைக் கண்ட நெட்டிசன்கள் இதற்கு கே.எல்.ராகுலை டெஸ்ட் அணியில் எடுத்து இருக்கலாம் என விமர்சித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்