VIDEO: ‘ஹெல்மெட்டை பதம் பார்த்த பவுன்சர்’!.. ஒரு நொடி நிலைகுலைந்து போன ‘இந்திய’ பேட்ஸ்மேன்.. ஆரம்பமே ‘அதிர்ச்சி’ கொடுத்த நியூஸிலாந்து வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசன் வீசிய பவுன்சர், இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லின் ஹெல்மெட்டில் பலமாக அடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஆரம்பமே இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த கூட்டணி 49 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அப்போது போட்டியின் 17-வது ஓவரை நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசன் வீசினார்.

அந்த ஓவரை இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் எதிர்கொண்டார். அப்போது கெயில் ஜேமிசன் வீசிய பவுன்சர் சுப்மன் கில்லின் ஹெல்மெட்டில் பலமாக அடித்தது. இதனால் அவர் ஒரு நொடி நிலைகுலைந்து போனார். இதன்காரணமாக தொடர்ந்து விளையாட சுப்மன் கில் சற்று சிரமப்பட்டார்.

அப்போது மீண்டும் கெயில் ஜேமிசன் வீசிய 21 ஓவரின் முதல் பந்தில் ரோஹித் ஷர்மா (34 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து நீல் வாக்னர் வீசிய 25 ஓவரில் சுப்மன் கில்லும் (28 ரன்கள்) அவுட்டாகினார். இவரைத் தொடர்ந்து புஜாராவும் 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரஹானே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் விராட் கோலி 44 ரன்களும், ரஹானே 29 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை இந்திய அணி எடுத்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்