இவ்ளோ சின்ன வயசுல 'அம்பயரா?'.. 'IPL' -க்கும் அழைச்சிட்டு வாங்கப்பா.. ரசிகர்கள் கோரிக்கை .. யாருங்க இந்த பொண்ணு??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவின் இளம் பெண் நடுவர் ஒருவர் தற்போது அதிகம் பிரபலமான நிலையில், அவர் யார் என்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Advertising
>
Advertising

கிரிக்கெட் அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்ட 'லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர்', நேற்று முடிவடைந்தது.

வேர்ல்டு ஜெயிண்ட்ஸ், இந்தியா மஹாராஜாஸ் மற்றும் ஆசியா லயன்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொண்ட நிலையில், இறுதி போட்டியில், வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆசிய லயன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில், வேர்லடு ஜெயிண்ட்ஸ் அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றது.

ரசிகர்கள் மத்தியில் பிரபலம்

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல அணிகளின் முன்னாள் நடச்சத்திர வீரர்கள் அதிகம் கலந்து கொண்டதால், அனைத்து போட்டிகளும் மிகவும் அதிரடியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றிருந்தது. இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனதைப் போலவே, போட்டியின் நடுவராக இருந்த இளம் பெண் ஒருவரின் பெயரும் அதிகம் பிரபலமானது.

பெண் கள நடுவர்கள்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், மொத்தம் நான்கு பெண் கள நடுவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பாகிஸ்தான், ஹாங்காங், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பெண் நடுவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், இந்தியா சார்பில் நடுவராக இருந்த சுப்தா போஷ்லே, கெய்க்வாட் தான், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் பிரபலம் அடைந்துள்ளார்.

கிரிக்கெட் மீது ஆர்வம்

நான்கு நடுவர்களில், மிகவும் இளம் நடுவரான சுப்தா போஷ்லே, மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அந்த மாநிலத்திற்காக, U 16 மற்றும் U 19 தொடர்களில் ஆடியுள்ளார். சுப்தா போஷ்லேவின் குடும்பமும் ஒரு கிரிக்கெட் குடும்பம் தான். அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர், ரஞ்சி தொடரில் ஆடியுள்ளனர். இதன் காரணமாக, சுப்தாவுக்கும் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது.

சுப்தா போஷ்லே

ஸ்போர்ட்ஸ் சைக்காலஜியில், PhD முடித்துள்ள சுப்தா போஷ்லே, அம்பயரிங் பிரிவில் 'O' லெவலில், தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் உதவியுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது.


கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கள நடுவராக இருந்து வரும் சுப்தா போஷ்லே, தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நடுவராக பணியாற்றியதன் மூலம், அதிக அளவில் புகழை பெற்றுள்ளார்.

ரசிகர்கள் கோரிக்கை

சுப்தா போஷ்லேவின் பிரபலம் காரணமாக, பலரும் அவரை இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் நடுவராக நிறுத்த வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வரும் அளவுக்கு ஆகியுள்ளது. 



அது மட்டுமில்லாமல், ஒரு பெண் நடுவராக, முன்னாள் வீரர்கள் போட்டியில் பங்கேற்ற அவருக்கு, பலரும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

SHUBHDA BHOSLE, LEGENDS LEAGUE CRICKET, IPL 2022, UMPIRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்