VIDEO: ஒருநாள் போட்டியில் ‘முதல் சதம்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய இளம் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினார்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா மற்றும் மயனங் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர்.

இதில் பிரித்வி ஷா 20 ரன்களும், மயனங் அகர்வால் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி நிதானமாக ஆடியது. இதில் விராட் கோலி அரைசதம் (51) அடித்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கே.எல்.ராகுலுடன் கூட்டணி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ஒருநாள் தொடரில் தனது முதல் சதத்தை (103) பதிவு செய்தார்.

அரைசதத்தை கடந்து ஆட்டமிழக்காமல் மைதானத்தில் இருந்த ராகுல் கடைசி 5 ஓவர்களில் சிக்ஸ் (6), பவுண்டரி (3) என விளாசி 64 பந்துகளில் 88 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களை எடுத்துள்ளது.

BCCI, CRICKET, VIRATKOHLI, KLRAHUL, INDVNZ, SHREYAS IYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்