மொத்த டீமும் எழுந்து நின்னு மரியாதை.. இளம் வீரருக்கு கிடைத்த ‘ராஜ வரவேற்பு’.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மொத்த வீரர்களும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 25-ம் தேதி கான்பூர் மைதானத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களும் எடுத்து டிக்ளேர் செய்தது. அதேபோல் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களும் எடுத்தது. இதனைத்தொடர்ந்து மேட்ச் டிரா என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் சதம் (105 ரன்கள்) அடித்து அசத்தினார். இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் (65 ரன்கள்) அடித்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போதெல்லாம், ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அப்போது நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 125 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.

அதனால் அவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது ஒட்டுமொத்த இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பு கொடுத்தனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. மேலும் இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHREYASIYER, INDVNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்