'ஆஸ்திரேலியாவில் ரன் சேஸிங்கில்’... ‘இந்திய அணி வீரர்கள் தடுமாறியது ஏன்’... ‘வெளிப்படையாக பதிலளித்த ஸ்ரேயாஸ்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய ஆடுகளத்தின் தன்மை வேறு விதமாக இருப்பதால், ரன்களை சேஸ் செய்வது, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக உள்ளதாக ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 தொடரில் விளையாடுகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில், முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
அதன்பிறகு டிசம்பர் 4 ஆம் தேதி முதல் டி20 தொடரும், டிசம்பர் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. இந்நிலையில், இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாடியது பற்றி, இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:
‘இப்போதுதான் துபாயில் இருந்து இங்கு வந்துள்ளோம். அங்குள்ள ஆடுகளங்களில் அந்த அளவுக்கு பவுன்ஸ் கிடையாது. அதே போல இங்குள்ள பயிற்சி ஆடுகளும், ஆட்டத்திற்கான ஆடுகளிலிருந்து வித்தியாசமாக உள்ளன. எனவே சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.
ஆடுகளத்தின் தன்மை, மைதானத்தில் உள்ள சூழலுக்கு நாங்கள் விரைவாக மாறிக் கொள்ள வேண்டும். 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டதும் சிரமமாக இருந்தது. விடுதி அறையில் மட்டுமே இருந்து பயிற்சிக்கு மட்டும் வெளியே வந்து மீண்டும் அறைக்குள் சென்று விட வேண்டும். எனினும் நாங்கள் தொழில்முறை விளையாட்டு வீரர்கள். இதுகுறித்து புகார் சொல்ல கூடாது’ என்று அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டீம்ல இடம் கிடைச்சும் ஏன் இப்படி???'... 'எல்லாத்துக்குமே கோலியோட அந்த பிளான்தான் காரணமா?!!'... 'அப்போ அடுத்த போட்டி???'...
- "இதெல்லாம் ரொம்பவே தப்பு"... 'IPL ரசிகர்களுக்கு பெரிய ஷாக்காக கொடுத்த அதிரடி வீரர்'... 'வெளிப்படையாகவே வெச்சு செஞ்ச பிரபலம்!!!'...
- 'அவரு இல்லாம எப்படி இந்தியா ஜெயிக்கும்’... ‘அப்டி ஜெயிச்சா, நம்பமுடியாத வெற்றியாதான் இருக்கும்’... ‘முன்னாள் கேப்டன் சவால்’...!!!
- எல்லாம் ஓகே...! ஆனால் நம்ம பவுலர்ஸ் கிட்ட பிரச்சனையே இதான்...! - இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து...!
- 'தமாஷா பேசுறதா நினைச்சு’... 'வம்பில் மாட்டிக்கொண்ட வைஸ் கேப்டன்’... ‘வெளுத்து வாங்கும் ரசிகர்கள்’...!!!
- 'இந்திய வீரர் பத்தி கமெண்டரியில் தப்பான தகவல்!!!'... 'சுட்டிக்காட்டியதும் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்!'...
- ‘டி20 போட்டினு நினைச்சுக்கிட்டாரு போல’... ‘இந்த வீரர்கள் எல்லாம் ஏன் எடுக்கல’... ‘கோலியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்’...!!!
- 'என்ன கோலி இவர எல்லாம் அனுப்புராரு?'... 'ஈவு இரக்கமே இல்லாம அடிச்சு நொறுக்குறாங்க'... 'இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலைமையா'?
- ‘என்ன ஒரு வேகம்’... ‘டைவ் அடிச்சும் முடியல’... ‘ஸ்ரேயாஸ் ஐயர் மிரட்டல்’... !!!
- "நான் அப்போவே அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்"... 'தெறிக்கவிட்ட மீம்ஸுக்கு'... 'அதிரடி வீரர் கொடுத்த வேறலெவல் ரிப்ளை!!!'...