எல்லா பந்துலயும் bowled ஆகிட்டு இருந்தாரு…. பயிற்சியில நடந்தத சொல்லி ஷாக்கான ஸ்ரேயாஸ் ஐயர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய பேட் கம்மின்ஸ் பற்றி கே கே ஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரே ஷாக் ஆகியுள்ளார்.

Advertising
>
Advertising

"கோர்ட்டுக்கு வரலனா உங்களுக்கு தூக்கமே வராதா?" கணவன் மனைவி இடையேயான வழக்குகள்.. கடுப்பான நீதிபதி..!

சூர்யகுமார் & பொல்லார்ட் அதிரடி…

15 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த சீசனின் 14-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி தங்கள் முதல் இரண்டு போட்டியையும் தோற்றிருந்ததால் இந்த போட்டியை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தோடு விளையாடியது.

தடுமாறி எழுந்த கொல்கத்தா…

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும், திலக் வர்மா 38 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியை பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பேட் கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் 23 ரன்கள் குவித்தனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர்.

பேட் கம்மின்ஸின் ருத்ரதாண்டவம்…

162 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் நிலைத்து நின்றார். 101 ரன்களுக்கு 5 விக்கெட்கள் விழுந்து தடுமாறிய போது  அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வந்து ருத்ரதாண்டவம் ஆடி  15 பந்துகளில் 56 ரன்களும் (4 பவுண்டரி 6 சிக்சர்கள்), சேர்த்து 16 ஓவர்களில் அணியை வெற்றி பெறவைத்தார். டேனியல் சாம்ஸ் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசினார் கம்மின்ஸ். ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதத்தில் கே எல் ராகுலை சமன் செய்துள்ளார் கம்மின்ஸ்.

ஷாக் ஆன ஸ்ரேயாஸ் ஐயர்…

போட்டி முடிந்த பின்னர் பேசிய கே கே அர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ‘என்னால் அவர் பேட் செய்ததை நம்பவே முடியவில்லை. ஏனென்றால் நான் நேற்று அவருக்கு அருகில்தான் பயிற்சி செய்தேன். அப்போது அவர் எல்லா பந்துகளிலும் பவுல்ட் ஆகிக் கொண்டிருந்தார்’ எனத் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  இதுபோல பேட் கம்மின்ஸ் தனது இன்னிங்ஸ் பற்றி பேசியபோது ’நானே என்னுடைய இன்னிங்ஸை பார்த்து சர்ப்ரைஸ் ஆகிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

‘ராணாவுக்கு அபராதம்.. பும்ராவுக்கு வார்னிங்’.. ஐபிஎல் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.. என்ன நடந்தது..?

CRICKET, SHREYAS IYER, PAT CUMMINS, PRACTICE, BOWL, BALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்