‘என்ன ஒரு வேகம்’... ‘டைவ் அடிச்சும் முடியல’... ‘ஸ்ரேயாஸ் ஐயர் மிரட்டல்’... !!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும், இரண்டாவது ஒரநாள் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்டம்பிங் ரன் அவுட் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணி இன்று களத்தில் இறங்கியது. டாஸ் வென்ற உடன் பேட்டிங்கை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இன்றி பீல்டிங்கில் களமிறங்கினர்.
முதல் போட்டியைப் போன்றே, இன்றும் ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கத்தை கொடுத்து வந்தது. விக்கெட்டுகள் இன்றி 142 ரன்கள் அந்த அணி சேர்த்தநிலையில், துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் ஆட்டமிழந்தார். இதையடுத்து நம்பிக்கை துளிர்விட இந்திய அணி பீல்டிங் செய்தது.
இந்நிலையில், 25 ஓவரில் 3 பந்தை ரவீந்திர ஜடேஜா வீசினார். அப்போது, ஸ்டீவ் ஸ்மித் தயங்கினாலும், டேவிட் வார்னர் ஓடி வந்ததைப் பார்த்த 2 ரன்கள் எடுக்க இருவரும் முற்பட்டனர். அப்போது, பீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஓடிவந்து பாலை எடுத்து, தூரத்தில் இருந்து வீசிய ஸ்டம்பிங்கை நோக்கி வீசினார்.
டேவிட் வார்னர் வேகமாக ஓடிவந்தும், அவர் வருவதற்கு முன்னதாக ஸ்டம்பிங்கில் சரியாக பந்து பட்டதால், அவர் அவுட் ஆனார். இதனால் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டிருந்த டேவிட் வார்னர், 83 ரன்களில் அவுட் ஆனதால் கடுப்பானார். தற்போது ஆஸ்திரேலிய அணி, 50 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, 389 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நான் அப்போவே அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்"... 'தெறிக்கவிட்ட மீம்ஸுக்கு'... 'அதிரடி வீரர் கொடுத்த வேறலெவல் ரிப்ளை!!!'...
- "இனிவர்ற போட்டிகளிலும் இந்தியாவுக்கு இதே நிலைமைதான்!!!"... 'அதிர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ள'... 'பிரபல வீரர் கூறும் காரணம்?!!'...
- நேத்து ‘மிடில் ஆர்டர்ல’ பொறுப்பான ஆட்டம்.. இனி அடுத்த ‘டார்கெட்’ அதுதான்.. பெரிய ப்ளான் போடும் பாண்ட்யா..!
- 'ப்ளேயிங் 11-லயே இப்படி சொதப்பி வச்சிருக்கீங்க'!.. 'மோசமான ஆட்டத்திற்கு காரணம்... கோலியின் ஓரவஞ்சனையா?'.. 'டோட்டல் டேமேஜ்'!.. பரபரப்பு பின்னணி!
- 'இப்ப சந்தோசமா'?..'உங்க 'ஈகோ'வால வந்த சிக்கல் தான் இது'!.. கோலி செஞ்சது சரியா தப்பா?.. இந்திய அணி மீது செம்ம கடுப்பில் ரசிகர்கள்!
- ‘கிரிக்கெட் நடந்து கொண்டிருந்தபோது மைதானத்துக்குள்’.. திடீரென பதாகையுடன் ஓடிவந்த நபர்கள்!.. சிட்னியில் பரபரப்பு! எதற்காக தெரியுமா?
- இந்த சம்பவம் ஞாபகம் இருக்கா..? ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ‘கண்ணீரில்’ நனைய வைத்த நாள்..!
- 'பெரிய தப்பு நடந்து போச்சு... என்ன மன்னிச்சுடுங்க'!.. மேட்ச்சின் நடுவே நடந்த ட்விஸ்ட்!.. ஷாக் ஆன இந்திய வீரர்கள்!.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கில்கிறிஸ்ட்!
- 'இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா'!.. ரோஹித் இடத்தை நிரப்பும்... கேப்டன் கோலியின் நெருங்கிய நண்பர்!.. சீறும் ரோஹித் ரசிகர்கள்!.. 'திட்டமிடப்பட்டதா?.. தற்செயலா'?
- ‘எங்களுடன் ஆஸ்திரேலியா வருவார்னு நினைச்சோம்’... ‘ஆனால்,’... ‘போட்டிக்கு முன்பு’... ‘ஒருவழியாக’... ‘போட்டுடைத்த விராட் கோலி’...!!!