'என்னங்க சொல்றீங்க...' அடுத்த 2 மேட்ச்ல 'அவரு' இல்லையா...? 'இளம் வீரருக்கு காத்திருக்கும் வாய்ப்பு...' - அப்படின்னா ஐபிஎல் மேட்ச்ல 'அந்த' டீம் கேப்டன் யாரு...?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

.இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின்போது, ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் வலிதாங்க முடியாமல்  மேட்ச் நடந்துக்கொண்டிருக்கும் போதே ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறினார். மறுபடியும் ஃபீல்டிங் செய்ய ஸ்ரேயாஸ் வந்தபோதிலும் தொடர்ந்து தோள்பட்டையில் வலி வர, பாதியிலேயே வெளியேறினார்.

இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், "இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் தோள் பட்டையில் எலும்பு லேசாக விலகியுள்ளது. அவரின் காயம் குறித்து ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளது.

                   

ஆனால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள தோள்பட்டைக் காயம் குணமடைவதற்கு சில வாரங்கள் தேவைப்படலாம் என்பதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் விலகல் குறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

                               

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில் அடுத்த இரு ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ், ஷூப்மான் கில் இருவரில் ஒருவர் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

                                     

அதேபோல, ஐபிஎல் டி20 தொடரிலும் முதல் பாதியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் பாதிப் போட்டிகளில் விளையாடவில்லை என்றால், கேப்டனாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்படலாம் அல்லது ரஹானே நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

லண்டனில் லான்கேஷையர் அணிக்கு கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்தம் செய்திருந்தார். ஜூலை 15-ம் தேதி முதல் லான்கேஷையர் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட இருந்த நிலையில், இந்தக் காயம் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்