"இந்தா அறிவிச்சுட்டாங்கல்ல".. இனி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலா இவரு தான் KKR கேப்டன்.. வெளியான Official தகவல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது உலகளவில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் பார்வையும் ஐபிஎல் தொடர் மீது தான் உள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன், வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | தாஜ்மஹாலை காண ஸ்ட்ரெச்சரில் வந்த 85 வயது மூதாட்டி.. கல்லையும் கரைய வைக்கும் உருக்கமான பின்னணி!!

மேலும் இதன் அறிமுக போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரை புதிதாக அறிமுகமாகி இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று பட்டையை கிளப்பி இருந்தது.

இதனையடுத்து, பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே 16 ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. அதே போல, இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால், அனைத்து அணியில் உள்ள வீரர்களும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கிடையே, பல ஐபிஎல் அணிகளில் உள்ள நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது அந்தந்த அணி ரசிகர்களுக்கு சற்று கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இதே போல இந்திய அணியின் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், விபத்தில் சிக்கியதன் காரணமாக ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாத சூழலும் உருவாகி உள்ளது. இதனால், அவருக்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இவர்களை போல இன்னும் சில வீரர்களும் காயம் காரணமாக விலகி உள்ள சூழலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம்பெறவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக, தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்பது பற்றியும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர் நிதிஷ் ராணா புதிய கேப்டனாக.அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தங்களின் சமூக வலைத்தள பக்கங்களிலும் கொல்கத்தா அணி பதிவிட்டுள்ளது. இதனையடுத்து, ரசிகர்களும் நிதிஷ் ராணாவை வாழ்த்தியும் வருகின்றனர்.

Also Read | "இது எப்படி இங்க, 400 வருஷம் பழமை ஆனதாம்".. வீட்டு சமையல் அறையை புதுப்பிச்சப்போ இளைஞர் கண்ட ஆச்சரியம்!!

CRICKET, IPL 2023, SHREYAS IYER, KKR CAPTAIN, NITISH RANA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்