‘வெறித்தனம்’.. முதல் போட்டியே இப்படியொரு சாதனையா..! மாஸ் காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ஜாம்பவான்களின் சாதனைப் பட்டியலில் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி கான்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

இதில் மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து வந்த புஜாரா 26 ரன்களிலும் கேப்டன் ரஹானே 35 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனிடையே சுப்மன் கில்லும் அரைசதம் (52 ரன்கள்) அடித்து ஆட்டமிழந்தார்.

இந்த சமயத்தில் களமிறங்கிய அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், ஜடேஜாவுக்கு 50 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்களில் அஸ்வின் மட்டுமே 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்களை இந்தியா எடுத்தது.

இந்த நிலையில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்ததன் மூலம் இந்திய ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்துள்ளார். அதில் முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி, வீரேந்திர் சேவாக், சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHREYASIYER, INDVNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்