‘நல்லா ஆடினாலும், தொடர்ந்து வாய்ப்பு தரலனா’... 'அது நல்லது அல்ல'... 'இளம் வீரர் உருக்கம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிறப்பாக ஆடுவோருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு தராதது நல்ல நடைமுறை அல்ல என இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார். இதற்காக இந்திய அணி அமெரிக்கா புறப்பட உள்ளது. இந்நிலையில் இதுபற்றி கூறிய ஸ்ரேயாஸ் ஐயர், ‘உண்மையான திறமை மிக்க வீரர்கள் பெரிய மட்டத்தில் தங்களை நிரூபிக்க கணிசமான வாய்ப்புகள் வழங்க வேண்டும்.  அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்தால் அது ஒருவரின் தன்னம்பிக்கைக்கு உதவாது.

அதாவது நம் மீதே நாம் நம்பிக்கை இழந்து விடுவோம், இது மோசமானது. எனவே பெரிய திறமை என்றாலும், நிரூபிக்க கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். 2019 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாகாதது கடினமானதாக இருந்தது. நாட்டுக்காக உலகக்கோப்பையில் ஆடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல திறமைசாலியாக இருந்தால், உங்களை நிரூபிக்க குறிப்பிட்ட அளவு வாய்ப்புகள் தேவை. எனக்கு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது.

நான் எதையும் பாசிட்டிவாக அணுகும் பழக்கம் உடையவன். அதனால் இதனையெல்லாம் மனதிற்குள் வைத்து நான் குழப்பிக்கொள்ள மாட்டேன். வருங்காலத்தில் கண்டிப்பாக அது நடக்கும் என நம்புகிறேன். மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இந்திய ஏ தொடர் எனக்கு  அங்குள்ள பிட்ச்களின் தன்மையை அதிகம் அறிய உதவியது’ என்று தெரிவித்துள்ளார்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, TEAMINDIA, MENINBLUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்