தலையை பதம் பார்த்த பவுன்சர்.. மருத்துவ பரிசோதனையில் இலங்கை வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது இலங்கை வீரர் விஷ்வா ஃபெர்ணாண்டோவின் ஹெல்மெட்டை பந்து பலமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | திருடிய சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்.. கூடவே இருந்த ஒரு லெட்டர்.. சுவாரஸ்ய சம்பவம்..!

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 397 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 193 ரன்கள் எடுத்து 1 ரன்னில் இரட்டை சதத்தை நழுவ விட்டார். அதேபோல் சண்டிமால் 66 ரன்களும், குசல் மெண்டிஸ் 54 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியின் போது இலங்கை பந்துவீச்சாளர் விஷ்வா ஃபெர்ணாண்டோவின் ஹெல்மெட்டில் பந்து பலமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச அணியின் பந்துவீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் வீசிய பந்து விஷ்வா ஃபெர்ணாண்டோவின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டது.

தற்போது விஷ்வா ஃபெர்ணாண்டோ மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்க உள்ளதாகவும், அதனால் இப்போட்டியில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இவருக்கு பதிலாக கசுன் ரஜிதா அணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CRICKET, VISHWA FERNANDO, SHORIFUL ISLAM, இலங்கை வீரர், விஷ்வா ஃபெர்ணாண்டோ, ஷோரிஃபுல் இஸ்லாம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்