'பந்தை அடிக்க சொன்னா'... 'எத பாஸ் அடிக்கிறீங்க'?... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் வீரர் சோகிப் மாலிக் அவுட் ஆன விதம்,மைதானத்தையே சிரிப்பலையால் அதிர வைத்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் 4வது போட்டி நாட்டிகாம் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி,அதிரடியாக விளையாடி 340 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க முதலே அதிரடியாக விளையாடியது.பாகிஸ்தான் பௌலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதற விட்டது.
இதையடுத்து 49.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி தனது இலக்கை எட்டி அதிரடி வெற்றியினை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் தொடக்க வீரர் ராய் 114 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.இந்த வெற்றியின் மூலம்,3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் சோகிப் மாலிக் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகிய விதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மார்க் வுட் வீசிய பந்தில் பந்தை அடிப்பதற்கு பதிலாக,தவறுதலாக ஸ்டெம்பை அடித்து ஹிட் விக்கெட் முறையில் அவுடாகி நடையை கட்டினார்.அதிரடியாக விளையாடி வந்த அவர் 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார்.சோகிப் மாலிக் அவுட் ஆன வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன ஒரு குத்த போடலாமா' ?...'ரொம்ப எதிர்பார்த்த பாட்டு வந்தாச்சு' ... வைரலாகும் வீடியோ!
- 'இது 'தோனி'க்கு கடைசி உலககோப்பையா'?...'தல' இத மட்டும் பண்ணனும்...மனம் திறந்த 'பிரபல வீரர்'!
- ‘கடல் கடந்து டி20 போட்டியில் விளையாட உள்ள ஆல்ரவுண்டர்’.. வரலாற்று சாதனை படைத்த முதல் இந்திய வீரர்!
- ‘2 நட்சத்திர வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
- 'ஒரே கிராமத்தில் 400 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று'... '2 வாரங்களில் 500 பேர் பாதிப்பு'... 'அதிர வைத்த மருத்துவர்'!
- அபி நந்தனை 40 மணி நேரம் சித்ரவதை செய்ததா பாகிஸ்தான் உளவு அமைப்பு..?
- ‘விக்கெட் கீப்பர் மனைவியிடம் கத்தி முனையில் நடந்த கொள்ளை’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- திறமையில் அவருக்கு பக்கத்தில் கூட யாராலும் வர முடியவில்லை - சேவாக் புகழ்ந்து தள்ளிய பிரபல வீரர்..!
- '24 வயதில் கபில்தேவ் தொட்ட சாதனை’.. 36 வருடங்களுக்கு பிறகு முறியடித்த 23 வயது வீரர்!
- 'மாஸ்டர்?.. இத நீங்க கவனிக்கலயே?'.. வம்பிழுத்த ஐசிசி.. வைரல் பதில் அளித்த சச்சின்!