"அவரு டி 20ல இருந்து Retire ஆகணும், ஏன்னா".. கோலி பத்தி அக்தர் சொன்ன விஷயம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "2,3 மூணு நாளா யாரையும் காணோம்".. வீட்டை சுற்றி வந்த துர்நாற்றம்.. "பிளாஸ்டிக் பைக்குள்ள".. குலை நடுங்கும் பின்னணி!!

முதலாவது நடந்த குரூப் சுற்றில் இருந்து இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதனையடுத்து, தற்போது சூப்பர் 12 சுற்றுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய டி20 உலக கோப்பை போட்டியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணி மோதுகின்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் மோத உள்ளது.

இதற்கு மத்தியில் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது தொடர்பாக பல்வேறு கருத்துகளும் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், கோலி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறிய போதிலும் கடைசி வரை களத்தில் நின்ற விராட் கோலி, இந்திய அணி வெற்றி பெறவும் வழி செய்திருந்தார். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விரட்டி இலக்கை கோலி எளிதாக்க, கடைசி பந்தில் அஸ்வின் ரன் அடிக்க வெற்றி இந்தியா அணி வசமாகி இருந்தது.

தொடருக்கு முன்பாக கோலி பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவை அனைத்திற்கும் தற்போது அசத்தலாக பதிலடி கொடுத்துள்ளார் விராட் கோலி.

இதனிடையே விராட் கோலி குறித்து அக்தர் சில கருத்துக்களை கூறி உள்ளார். "இந்திய அணி சிறப்பாக ஆடி இருந்தது. கிரிக்கெட் வரலாற்றில் மிக அற்புதமான போட்டியையும் அவர்கள் வென்றுள்ளனர். இந்த போட்டியில் விராட் கோலி தன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய இன்னிங்ஸை ஆடி உள்ளார். தன்னம்பிக்கை அதிகமாக இருந்ததால் தான் அவரால் இப்படி ஒரு ஆட்டத்தை விளையாட முடிந்தது.

ஆனால் அதே வேளையில், டி20 போட்டியில் இருந்து கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். ஏனென்றால், தன்னுடைய மொத்த எனர்ஜியையும் அவர் இந்த டி20 கிரிக்கெட்டிற்காக போட வேண்டாம் என்றும் நான் நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் தனது முழு ஆற்றலையும் அவர் செலுத்த வேண்டும் என்பதை நான் விரும்பவில்லை. இந்த போட்டியில் அவர் காட்டிய அர்ப்பணிப்பை கொண்டு ஒரு நாள் போட்டிகளில் 3 சதங்களை கூட அவரால் அடிக்க முடியும்" என அக்தர் கூறி உள்ளார்.

டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி குறித்து சோயப் அக்தர் தெரிவித்துள்ள கருத்து பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Also Read | வெள்ளிக்கிழமை 5 மணி வரைதான் டைம் இருக்கு.. தீவிர முயற்சியில் எலான் மஸ்க்.. பரபர பின்னணி..!

CRICKET, SHOAIB AKHTAR, VIRAT KOHLI, T20 WORLD CUP 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்