"சச்சின் மட்டுமில்லாம, எல்லாருமே அப்ப திணறுனாங்க.. ஆனா, இந்த தமிழ்நாடு பவுலர் இருக்காரே.." மிரண்டு போன அக்தர்.. யார சொல்றாரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் வேகத்தை பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Advertising
>
Advertising

“கடைசியில அவர் ஒரு போர்வீரன் மாதிரி சண்டை போட்டாரு”.. சிஎஸ்கே தோல்விக்கு பின் சுரேஷ் ரெய்னா போட்ட ட்வீட்..!

ஒரு காலத்தில் பல கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களும், அக்தரின் பந்தை எதிர்கொள்ள சற்று தடுமாற்றம் தான் கண்டனர்.

அந்த அளவுக்கு அவரது பந்தின் வேகம் அச்சுறுத்தும் என்பதால், அதிகம் பயந்து தான் அக்தரின் பந்தை எதிர்கொள்ளும் நிலை இருந்தது.

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் சோயிப் அக்தரின் பந்தினை சச்சின், சேவாக் உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள், அசாத்தியமாக எதிர்கொண்டுள்ளனர். ஆனாலும், அவர்களின் விக்கெட்டையும் பல முறை எடுத்து அசத்தி உள்ளார் அக்தர்.

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்

இந்நிலையில், தன்னுடைய பந்து வீச்சை தமிழக வீரர் ஒரு பயப்படாமல் அடித்தது பற்றி, சில கருத்துக்களை தற்போது மனம் திறந்து வெளியிட்டுள்ளார் சோயிப் அக்தர். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து, அக்தர் ஒரு வீடியோவில் உரையாடினார். அப்போது இருவரும், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டி குறித்து மாறி மாறி பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டனர்.

அசத்தலாக எதிர்கொண்ட தமிழக வீரர்

ஐபிஎல் தொடரில் முதல் ஹாட் ட்ரிக் எடுத்த வீரர் யார் என்ற கேள்வியை, ஹர்பஜன் சிங்கிடம் முன் வைத்தார் அக்தர். இதற்கு ஹர்பஜன் சிங் தவறாக பதிலளிக்கவே, லக்ஷ்மிபதி பாலாஜி என அக்தர் சரியான தகவலை தெரிவித்தார். தொடர்ந்து, பாலாஜி குறித்த ஒரு தகவலையும் அக்தர் பகிர்ந்து கொண்டார்.

சச்சின் கூட தடுமாறுனாரு..

கடந்த 2004 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி அசத்தி இருந்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், 2 - 2 என சமநிலையில் தொடர் இருந்தது. ஆனால், கடைசி போட்டியை இந்திய அணி வென்று, தொடரை சொந்தம் ஆக்கி இருந்தது. அந்த தொடர் பற்றி பேசிய அக்தர், "சச்சின் கூட எனது பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். அவர் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய அணியும் எனது பந்தை எதிர்கொண்டு, ரன் சேர்க்க தடுமாற்றம் கண்டது. ஆனால் கீழ் வரிசையில் பேட்டிங் செய்த பாலாஜி, எனது ஓவரில் சிக்ஸர் ஒன்றை அடித்திருந்தார்" என குறிப்பிட்டுள்ளார்.

சிக்ஸர், பவுண்டரி தான்

கடைசி ஒரு நாள் போட்டியின் கடைசி ஓவரை அக்தர் வீசி இருந்தார். இதில் பந்தை எதிர்கொண்ட பாலாஜியின் பேட் உடைந்து போனது. ஆனால், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தரின் அதே ஓவரில், சிக்ஸர் ஒன்றை பாலாஜி பறக்க விட்டிருந்தார். இதற்கு முந்தைய ஒரு நாள் போட்டி ஒன்றிலும், அடுத்தடுத்து பவுண்டரிகளை அக்தர் ஓவரில் பாலாஜி அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"இவருக்கா இப்டி நடக்கணும்?.." ஐபிஎல் போட்டிக்கு நடுவே தோன்றிய இஷாந்த் ஷர்மா.. அந்த கோலத்த பார்த்து வேதனைப்பட்ட ரசிகர்கள்

CRICKET, SHOAIB AKTHAR, BALAJI, SACHIN TENDULKAR, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சோயிப் அக்தர், ஹர்பஜன் சிங்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்