'கொரோனாவ தடுக்க நிதி வேணுமா'?...'பிரபல கிரிக்கெட் வீரரின் ஐடியா'... நெட்டிசன்கள் கேட்ட ஒரே கேள்வி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக, இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் கூறியுள்ளார்.
உலகின் பல நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், பல நாடுகளின் பொருளாதாரம் அடியோடு முடங்கி கிடக்கிறது. இதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
இந்நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ''தற்போது நாம் அனைவரும் கடினமான காலகட்டத்தில் இருக்கிறோம். இதனை எதிர்கொள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும்.
இதில் யார் ஜெயிக்கிறார்கள் அல்லது தோற்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை, இரு நாடுகளும் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம். தற்போது அனைவ்ரும் வீட்டில் டிவி முன்பு தான் அமர்ந்து இருக்கிறார்கள். அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்க்க முடியும். துபாய் போன்ற பொதுவான இடத்தில் இந்த தொடரை நடத்த ஏற்பாடு செய்யலாம். இந்த போட்டியால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் உறவு துளிர்க்கவும், இரு நாட்டு உறவு மேம்படவும் வாய்ப்புள்ளது'' என கூறியுள்ளார்.
இதற்கிடையே தற்போது சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அனைவரும் கூறி வரும் நிலையில், கிரிக்கெட் போட்டி எப்படி சத்தியம் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்துள்ள அக்தர், ''ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் இந்த போட்டியை நடத்தலாம் எனவும், அதுவும் நிலைமை சற்று சரியான பின்பு நடந்த வேண்டும்'' எனவும் அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக பலியான மருத்துவர்.. நாட்டையே கலங்க வைத்த சம்பவம்!
- 'வெளிநாட்டுல இருக்கறவங்க என்ன பண்ணுவாங்க!?'...'அதுக்காக தான் 'இத' செய்றோம்!'... கேரள முதல்வர் பினராயி விஜயன் அடுத்த அதிரடி!
- “இந்தியாவுக்கு மட்டுமில்ல.. மனித குலத்துக்கே உதவும் வலுவான தலைமை”... நன்றிப்பெருக்குடன் ட்வீட் போட்ட ட்ரம்ப்!
- 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக்கிட்டா நல்லது'...ஆனா இவங்க கண்டிப்பா சாப்பிட கூடாது!
- ‘அவங்க கொரோனாவையும் சேத்து கொண்டு வருவாங்க!’.. பெண் மருத்துவர்களுக்கு குடியிருப்புவாசிகளால் நேர்ந்த கொடுமை!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'கொரோனா' வைரஸ் வடிவில் 'கார்..!' 'ஹைதராபாத்' நிபுணருக்குத் தோன்றிய 'மகா சிந்தனை...' 'ஊரடங்கின்' நடுவே உலா வந்து 'விழிப்புணர்வு...'
- '24 மணி நேரத்தில் சட்டெனெ கூடிய கவுண்ட்'... 'இந்தியாவில் 5734 பேர் பாதிப்பு'... இது தான் காரணமா?
- 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது...' 'ட்ரம்ப் விடாப்பிடியாக இருப்பது ஏன்?...' 'சந்தேகம்' எழுப்பும் 'நியூயார்க் டைம்ஸ்...'
- “இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மளிகை, காய்கறிகள் வாங்க மக்களுக்கு அனுமதி!”.. 144 உத்தரவால் சேலத்தில் கெடுபிடி!