‘மூளையில்லாத கேப்டன் சர்பிராஸ்..’ இவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.. விளாசிய முன்னாள் வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியாவிடம் 89 ரன்களில் பாகிஸ்தான் 7வது முறையாகத் தோல்வியடைந்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை அந்த நாட்டு ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சர்பிராஸ் அகமதுவைப் போல ஒரு மூளையில்லாத கேப்டன் இருக்க முடியுமா என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நம்மால் சேஸிங் செய்ய முடியாத நிலையில் எதற்காக சேஸிங்கைத் தேர்வு செய்ய வேண்டும். சர்பிராஸ் அணியின் பலம் பேட்டிங் அல்ல பந்துவீச்சுதான். ஆடுகளம் காய்ந்த நிலையில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கிறது. டாஸ் வென்ற அவர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தாலே அது பாதி வெற்றி பெற்றதுபோலத்தான்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

பாகிஸ்தான் அணி பற்றிப் பேசிய அவர், “முட்டாள்தனமான மூளையில்லாத கேப்டன்ஷிப் மூடத்தனமான நிர்வாகம்தான் வெளிவந்துள்ளது. சராசரியான பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து மிகப்பெரிய அளவில் எதையும் எதிர்பார்க்க முடியாது. கேப்டன் சர்பிராஸ் 10வது படிக்கும் மாணவர் போல செயல்பட்டு முடிவுகளை எடுக்கிறார்” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ICCWORLDCUP2019, INDVSPAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்