நீங்க ஜெய்ச்சு 'எங்க' கூட 'ஃபைனல்' விளையாடணும்...! 'அங்க உங்கள வச்சு செய்யணும்...' 'அதான் என்னோட ஒரே ஆசை...' - இந்தியாவை சீண்டும் முன்னாள் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதோடு, இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடங்கியது முதலே அதிக கவனம் இந்திய அணி மீது செலுத்தப்பட்டது. ஆனால் இந்திய அணிக்குத் தொடக்கமே சறுக்கலாக அமைந்தது.

Advertising
>
Advertising

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி தோற்றது. உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்று விட்டது என்ற பெயரையும் முதன்முதலில் சந்தித்தது. அதன்பின் நியூசிலாந்து அணியுடன் மோதிய தொடரிலும் இந்தியா தோல்வியையே சந்தித்தது.

அதன் பின் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்துடன் ஆடிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று ரசிகர்கள் மனதை குளிர்வித்தது. இன்று (07-11-2021) நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆப்கனை வீழ்த்தினால் மட்டுமே இந்தியா அணி இறுதி போடிக்கு நுழைய முடியும். அதோடு, நாளை மறுநாள் நடைபெறும் போட்டியிலும், தேவையான நெட் ரன்ரேட்டிற்குக்கு ஏற்ப நமீபியாவை இந்தியா வீழ்த்தினால் மட்டுமே இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

தற்போது இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

அதில்,  'இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் என்னுடைய ஆசை என்னவென்றால் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும்.

அப்போது தான், பாகிஸ்தான் அணி மீண்டும் இந்தியாவை வீழ்த்த முடியும். இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணி மோதும் நிலையில் ஏற்பட்டால் உலகக் கோப்பை இன்னும் அதிகம் ரீச் ஆகும்.

நான் முதலிலேயே சொன்னது தான் இந்தியா 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியின் உலகக் கோப்பைப் பயணம் முடிந்துவிடவில்லை என. இப்போது இந்தியா ஃபாம்க்கு வந்துவிட்டது. ஆனால், இப்போது இந்தியாவின் தலையெழுத்து இப்போது நியூசிலாந்து கையில் இருந்தது.

ஆப்கானிஸ்தானை விட நியூசிலாந்து சிறந்தது. இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் போட்டியாக ஆப்கன் - நியூசிலாந்து போட்டி மாறியுள்ளது' என தெரிவித்துள்ளார்.

SHOAIB AKHTAR, FINAL, T20, INDIA, PAKISTAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்