“அப்பவே சொன்னேன்.. இப்படி ஏதாவது நடக்கும்னு”.. ஹர்திக் பாண்ட்வை முன்னாடியே எச்சரித்த பாகிஸ்தான் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் காயத்தை முன்கூட்டியே எச்சரித்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | KKR பேட்ஸ்மேனுக்கும், RR பவுலருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்.. மேட்ச் ரொம்ப பரபரப்பாக இருந்திருக்கு போலயே..!

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. அப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அந்த போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் ரஷித் கான் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே பாகிஸ்தான் ஜாம்பவான் எச்சரித்திருந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘ஒருமுறை துபாயில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவிடம் நான் பேசினேன். அந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியாவின் கை தசைகளை பிடித்துப் பார்த்தபோது அது மிகவும் ஒல்லியாக இருந்தது. இதுபோன்ற குறைவான தசைகள் காயத்தை ஏற்படுத்தும் என்று அப்போதே எச்சரித்தேன்.

அப்போது, நான் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறேன் என்பதால், காயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என ஹர்திக் கூறினார். ஆனால் அன்றைய போட்டியிலேயே அவருக்கு காயம் ஏற்பட்டது. தசைகள் மிகவும் குறைவாக இருந்தால் நிச்சயம் அடிக்கடி காயம் வரும். இதனை சரி செய்தால்தான் நல்லது’ என சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

காயம் காரணமாக நீண்ட நாட்களாக இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா விளையாடாமல் இருந்தார். இதனை அடுத்து குணமடைந்து அணிக்கு திரும்பி அவர், பவுலிங் வீசுவதை தவிர்த்து வந்தார். மேலும் பேட்டிங்கில் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. அதனால் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்த சூழலில், நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தி வருகிறார். அதனால் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. இப்படி உள்ள சூழலில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | “அவரை எதுக்கு முன்னாடியே அனுப்புனீங்க?”.. KKR கோச்சிடம் கோபமாக பேசிய ஸ்ரேயாஸ்.. கடைசி நேரத்தில் நடந்த பரபரப்பு..!

CRICKET, IPL, IPL 2022, SHOAIB AKHTAR, HARDIK PANDYA, GT CAPTAIN HARDIK PANDYA, CSK, ஹர்திக் பாண்ட்யா, சோயிப் அக்தர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்