'இந்தியாவின்' அடுத்த ஸ்டார் பிளேயர் 'ஜெய்ஸ்வால்தான்'... 'புகழ்ந்து' தள்ளிய 'சோயப் அக்தர்'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்னும் பல உயரங்களுக்கு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் செல்வார் என்கிற எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பாராட்டியுள்ளார்.  மேலும், ஜெய்ஸ்வாலிடமிருந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறு வயதில் பால் பண்ணையில் வேலை பார்த்தும், பானிபூரி விற்றும் வாழ்க்கை நடத்தி வந்த இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால், 11 வயதில் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றார். வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து, தூக்கம் இல்லாதபோதும், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். தற்போது யு 19 உலகக் கோப்பை போட்டியில் தனது திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த பாகிஸ்தானின் சோயிப் அக்தர் ``இந்தியாவின் ஜெய்ஸ்வால், இன்னும் பல உயரங்களை எட்டிப்பிடிப்பார் என்கிற எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``கிரிக்கெட் விளையாடுவதற்கான சக்தியும் அதன்மீது அவருக்கு கனவும் ஆர்வமும் இருக்கிறது. சீனியர் அணியையும் வழிநடத்துவார் என்பது உறுதி. ஜெய்ஸ்வாலிடமிருந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பாக விளையாடுவதை நோக்கி ஜெய்ஸ்வால் ஓடுகிறார். பணம் அவரை நோக்கி ஓடுகிறது" என புகழ்ந்திருக்கிறார்.

இந்த உலகக்கோப்பை முழுவதுமே சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வாலுக்கு முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

YASHASVI JAISWAL, SHOAIB AKHTAR, CRICKET, U-19 WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்