“நெறைய பணம் செலவு செஞ்சிருக்காங்க.. நிச்சயம் ஏதாவது செய்வாங்க”.. MI அணி பற்றி பாகிஸ்தான் வீரர் சொன்ன கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணி ஏலத்தில் அதிகமாக செலவு செய்திருப்பதால், நிச்சயம் சரிவில் இருந்து மீண்டு வரும் என பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக அறியப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இந்த ஆண்டு சறுக்கலாகவே தொடங்கியுள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் இரு அணிகளும் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளன.

இதில் மும்பை அணி பல சீசன்களில் வழக்கமாக தொடக்க ஆட்டத்தில் தோல்வியையே பெரும்பாலும் தழுவியுள்ளது. ஆனால் அடுத்த ஆட்டங்களில் பலமாக மீண்டெழுந்து கோப்பையை தன்வசமாக்கிய வரலாறு மும்பைக்கு உள்ளது. இந்த வரலாறுக்கு 2021 சீசன் மட்டும் விதிவிலக்காக மாறியது. தொடர்ந்து தோல்வியை தழுவிய மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஐபிஎல் தொடரின் இறுதிக் கட்டங்களில்தான் மும்பை அணி எப்போதும் அதிசயங்களைச் செய்கிறது. அவர்கள் வேகத்தை அதிகபடுத்த நேரம் எடுக்கும். கடந்த சீசன் வரை அவர்கள் நடுவில் அல்லது முடிவில் வேகத்தை எடுத்துள்ளனர். சில நேரங்களில், அவர்கள் போட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேறிவிட்டார்கள் என்று நினைப்போம். ஆனால் நம் எண்ணங்களை மாற்றியமைத்து கோப்பையை வென்றுள்ளார்கள்.

அதேபோல் நடந்து முடிந்த ஏலத்தில் அவர்கள் நிறைய பணம் செலவு செய்துள்ளனர். அதை நியாயப்படுத்த அவர்கள் இறுதியில் ஏதாவது செய்வார்கள் என்று நினைக்கிறேன்’ என சோயப் அக்தர் கூறியுள்ளார். 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பி வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUMBAI-INDIANS, IPL, SHOAIBAKHTAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்