"உங்களுக்கு தான் வெயிட்டிங்"..Finalsல் பாகிஸ்தான்.. இந்திய அணியை குறிப்பிட்டு அக்தர் பகிர்ந்த ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் வைத்து தற்போது எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் முதல் அரை இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது.

Advertising
>
Advertising

இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான அணி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக அடி ரன் சேர்த்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி 20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

முன்னதாக, சூப்பர் 12 சுற்றில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது பாகிஸ்தான் அணி. இதனால், அவர்கள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதில் நெருக்கடியும் உருவாகி இருந்தது. ஆனால், அடுத்தடுத்த மூன்று போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியதுடன் மட்டுமில்லாமல், தற்போது இறுதி போட்டிக்கும் நுழைந்து தங்களது திறனை நிரூபித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, பாகிஸ்தானை இறுதி போட்டியில் எதிர்கொள்ளும். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை தொடரில் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது. இதன் பிறகு இந்த முறை இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்புள்ளதால் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதி போட்டியை காண வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேற வேண்டும் என்பது பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இந்தியா, நாங்கள் மெல்போர்ன் அடைந்து விட்டோம். இப்போது உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு வாழ்த்துக்கள், நீங்கள் மெல்போர்னை அடைவீர்கள் என நம்புகிறேன். இந்தியா Vs பாகிஸ்தான் இறுதி போட்டியில் ஆட வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்கள் ஒருமுறை கூட ஒருவருக்கு ஒருவர் எதிர்கொள்வார்கள். ஒட்டுமொத்த உலகமும் அதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது" என கூறி உள்ளார்.

அதே போல, தனது கேப்ஷனிலும், "டியர் இந்தியா, நல்வாழ்த்துக்கள். ஒரு சிறந்த கிரிக்கெட்டிற்காக மெல்போர்னில் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றால், நிச்சயம் முழுக்க முழுக்க போட்டி சூடு பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

SHOAIB AKHTAR, IND VS PAK, IND VS ENG, T20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்