"இன்னும் 4,5 வருசம் நான் ஆடி இருந்தா.." மருத்துவமனையில் இருந்து அக்தர் வெளியிட்ட 'வீடியோ'.. எமோஷனல் ஆன ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், மருத்துவமனையில் இருப்பது தொடர்பான வீடியோ, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பாலத்துக்கு அடியில்.. துணி குவியலுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்.. ஸ்பாட்'ல போய் விசாரிச்ச போலீஸ்.. "அப்படியே கேஸ் ட்விஸ்ட் ஆயிடுச்சு.."

கிரிக்கெட் உலகில், மிக வேகமான மற்றும் எதிர்கொள்ள அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர்  என்றால் நிச்சயம் சோயப் அக்தர் பெயரை சொல்லலாம்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர், தான் ஆடிய காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக வலம் வந்தார். அக்தர் வீசும் பந்தின் வேகம் காரணமாக, அவருக்கு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற ஒரு பட்டப் பெயரும் உண்டு.

இந்நிலையில், சமீபத்தில் சோயப் அக்தர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் மனம் வருந்த செய்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் அக்தர், தற்போது ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, ஒரு சில தினங்களுக்கு முன், முழங்கால் அறுவை சிகிச்சையும் அக்தருக்கு மேற்கொள்ளபட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின் சோயப் அக்தர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், தான் வலியுடன் இருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் ரசிகர்களை அக்தர் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து, "நான் இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள், பாகிஸ்தான் அணிக்காக ஆடி இருக்க முடியும். ஆனால், அப்படி நான் ஆடி இருந்தால், அப்போதே நான் சக்கர நாற்காலியில் வாழ்நாள் முழுவதும் அமர வேண்டிய துர்பாக்கியசாலியாக மாறி இருப்பேன். இதனால் தான், நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன்.

ஆனால், அதே வேளையில் பாகிஸ்தானுக்காக எதையும் செய்வது மதிப்புமிக்க ஒன்று தான். வேகமாக பந்து வீசுவதன் காரணமாக, எலும்புகளை இழந்து விடுவோம். ஆனால் அது பரவாயில்லை. மீண்டும் பாகிஸ்தானுக்காக எலும்புகளை இழந்தாலும் குழப்பமில்லை என்று தான் தோன்றுகிறது" என தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளாக, முழங்கால் வலியால் அக்தர் தவித்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், ஓய்வு பெற்ற பிறகும் இதன் வலி பயங்கரமாக இருப்பதாகவும் அக்தர் தெரிவித்துள்ளார். ஆக்ரோஷம் நிறைந்த வேகப்பந்து மூலம், எதிரணியினரை திணறடித்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தரின் தற்போதைய நிலையைக் கண்டு, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மனம் உடைந்து போயுள்ளனர்.

 

Also Read | பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா.. பரபரப்பான அரசியல் களம்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

CRICKET, SHOAIB AKHTAR, SHOAIB AKHTAR LATEST VIDEO, HOSPITAL, FANS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்