Cup அடிச்ச குஷி.. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்திய அணியினர் போட்ட குத்தாட்டம்.. இதுக்கும் கேப்டன் தவான் தான் போலேயே.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்கா அணியுடனான வெற்றியை தொடர்ந்து ட்ரெஸ்ஸிங் அறையில் அணியினருடன் நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | கோவிலில் சாமிக்கு நடந்த தீபாராதனை.. முட்டிபோட்டு வணங்கிய ஆடு.. ட்ரெண்டாகும் வீடியோ..!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற T20 தொடரை இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் நேற்று முடிவடைந்தது. ஏற்கனவே T20 தொடரை வென்ற இந்திய அணி, நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது.
ஒருநாள் தொடர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. கிளாசன் (34) தவிர மற்ற அனைவருமே அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இதனால், 27.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து தென் ஆப்பிரிக்கா. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
வெற்றி
இதனையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதாவிற்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. முகமது சிராஜ் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
வீடியோ
போட்டி முடிவடைந்ததும், வெற்றியை கொண்டாடும் வகையில் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் இந்திய வீரர்கள் ட்ரெஸ்ஸிங் அறையில் நடனமாடியிருக்கின்றனர். இந்த வீடியோவை ஷிகர் தவான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பஞ்சாபி பாடலுக்கு இந்திய அணியினர் நடமாடும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | கோமாவில் இருந்த வயதான நர்ஸ்.. நினைவு வந்த அப்பறம் அவங்க சொன்ன விஷயம்... மிரண்டுபோன டாக்டர்கள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கேட்ச் பிடிக்க வந்த பவுலரை தடுத்த மேத்யூ வேட்..?.. கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை - வீடியோ!!
- Toss போடணும்.. காசு எங்க?.. கிரவுண்டில் நடந்த சுவாரஸ்யம்.. வைரல் வீடியோ..!
- ஒரே லைனில் தோனி சொன்ன விஷயம்.. வேற லெவல் உற்சாகத்தில் CSK ரசிகர்கள்!!..
- "இதுக்கு எல்லாம் 4 ரன் குடுப்பீங்களா?".. நடுவரிடம் விவாதத்தில் ஈடுபட்ட சிராஜ்.. பரபரப்பை கிளப்பிய சம்பவம்!!
- தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்? சோகத்தில் மூழ்கிய குடும்பம்
- ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்.. அதுக்கு முன்னாடி அவர் போட்ட உருக்கமான போஸ்ட்.. முழு விபரம்..!
- "அந்த ஒரு ஓவர்'ல தான் மேட்ச் மாறிடுச்சு".. சாம்சன் இருந்தும் அரங்கேறிய சிக்கல்??.. இந்தியா கூட ஜெயிச்சு இருக்கும் போலயே"!!
- T20 போட்டியில் இரட்டை சதம்.. கிரவுண்ட்ல வெஸ்ட் இண்டீஸ் வீரர் காட்டிய வானவேடிக்கை.. மிரண்டு போன ஆடியன்ஸ்..!
- "யப்பா, என்ன ஷாட் இது?".. வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடிச்ச அந்த ஒரு 'சிக்ஸ்'.. வீடியோ'வ பாத்து அரண்டு போன ரசிகர்கள்!!
- இந்தியா டீம் Whatsapp குரூப் மூலமா இளம் வீரருக்கு தெரிஞ்ச விஷயம்.. பல நாள் உழைப்புக்கு கெடச்ச அதிர்ஷ்டம்!!