ரன் எடுக்க 'ரொம்ப' தெணறுறாரு.. மூத்த வீரரை 'கழட்டி'விடும்.. இந்திய அணி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபகாலமாக ரன் எடுக்க மிகவும் திணறி வரும் ஷிகர் தவானை அணியில் இருந்து கழட்டிவிட இந்திய அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் வீரரான ஷிகர் தவான்(34) உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின் பார்ம் இன்றி தவித்து வருகிறார். தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அவர் திணறியது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க தவறவில்லை.

எனினும் வங்கதேச தொடரில் தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிக பந்துகள், கட்டுப்பாடு இல்லாத பேட்டிங் என ரன்கள் எடுக்க அவர் திணறியதை இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களும் பார்த்துள்ளனர். சமீபத்தில் நடந்த அணி தேர்வாளர்கள் கூட்டத்தில் தவானின் மோசமான பார்ம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வங்கதேச அணியில் சொதப்பிய கையோடு சமீபத்தில் நடைபெற்ற முஷ்டாக் சையது அலி டிராபி தொடரில் தவான் பங்கேற்றார். இழந்த பார்மை மீட்பார் என பார்த்தால் ஜம்மு - காஷ்மீருக்கு எதிராக - 0 ரன்கள் (9 பந்துகள்), ஜார்கண்ட்டுக்கு எதிராக - 9 ரன்கள்(6), சிக்கிம்க்கு எதிராக 19 ரன்கள் (18), ஒடிசாவுக்கு எதிராக - 35 (33) ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த நிலையில், தவானுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் கிடைக்காது என்றே பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது. அவருக்கு பதில் இளம் வீரர்களில் ஒருவர் துவக்க வீரராக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மயங்க் அகர்வால், ஷுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் தவானுக்கு பதிலாக களமிறங்கலாம் என கூறப்படுகிறது.

நாளை (நவம்பர் 21) ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதில் தவான் இடம் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்