ஷிகர் தவனின் லவ் Proposal-ஐ மறுத்த பெண்.. அண்ணாமலை ஸ்டைலில் தவன் கொடுத்த செம்ம ரிப்ளை..வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷிகர் தவன் தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பெண்ணிற்கு கொடுத்த தரமான பதில் குறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஷிகர் தவன்
இந்திய அணியின் ஒப்பனராக களமிறங்கும் ஷிகர் தவன் இதுவரையில் 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 6284 ரன்களையும் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2315 ரன்களையும் குவித்து உள்ளார். 68 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஐபிஎல் தொடரிலும் அதிரடி பேஸ்ட்மேனாக அறியப்படுகிறார்.
ஐபிஎல்-ல் 5875 ரன்களை குவித்துள்ள இவர் 2 சதங்களையும் விளாசியுள்ளார். கடந்த தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிவந்த தவனை பெங்களூரில் நடைபெற்ற ஏலத்தில் தட்டி தூக்கியது பஞ்சாப் அணி.
அந்த அணிக்காக ஓப்பனிங் செய்துவரும் தவன் தற்போது தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து பேசியிருக்கிறார். பஞ்சாப் அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், தன்னுடைய முந்தைய காதல் குறித்து ஷிகர் தவன் நினைவுகூர்ந்து உள்ளார்.
மறுப்பு
பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் பேசிய தவன், " ஒரு முறை ஒரு பெண்ணிடம் என்னுடைய காதலை வெளிப்படுத்தினேன். ஆனால், அவர் அதனை மறுத்துவிட்டார். அப்போது நீ கோஹினூர் வைரத்தை மறுத்திருக்கிறாய் என அவரிடத்தில் கூறினேன்" என குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் தவன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பஞ்சாப் வீரர் பட்டியலில் உள்ளார். பஞ்சாப் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லியம் லிவிங்ஸ்டன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 3 போட்டிகளில் லியம் 98 ரன்களை எடுத்துள்ள நிலையில் ஷிகர் தவன் 92 ரங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பெண்ணிற்கு தான் கூறிய பதில் குறித்து ஷிகர் தவன் பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “10 வருசமா ஒரே தப்பதான் செஞ்சிட்டு இருக்காரு.. அவர் தலையில கோச் குட்டு வைங்க”.. சஞ்சு சாம்சனை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி..!
- “சின்ன பையன்.. ஒல்லியா இருக்கான்.. எங்க சிக்ஸ் அடிக்கப் போறான்னு நெனச்சிருப்பாங்க”.. இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய RCB கேப்டன்..!
- “அஸ்வீன் வீசுன அந்த ஒரு ஓவர்தான் RR தோக்கவே காரணம்!”.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
- கோப்பையை வெல்லாமல் இந்த milestone-ஐ எட்டிய ஒரே டீம் RCB தான்… அப்படி என்ன சாதனை தெரியுமா?
- “நெறைய உள்ளூர் மேட்ச்ல பார்த்திருக்கேன்.. ருதுராஜோட வீக்னஸ் இதுதான்”.. பிரச்சனையை சுட்டிக் காட்டிய முன்னாள் வீரர்..!
- “என் ஆட்டம் இன்னும் முடியல..!”.. வேறலெவல் வெற்றிக்கு பின் RCB தினேஷ் கார்த்திக்கின் வைரல் பேச்சு..!
- ‘எப்பா என்னா கேட்ச்..’ முன்னாள் RCB வீரரை மிரள வைத்த விராட் கோலி.. செம வைரல்..!
- “ஜடேஜாவால தோனிக்கு தான் தலைவலி”.. சிஎஸ்கே அணியில் இருக்கும் பிரச்சனை.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!
- “வாய்ப்புக்காக ரொம்ப காலமா காத்திருந்தாரு.. இப்போ வேறலெவல்ல விளையாடுராப்ல”.. இளம் வீரரை ஸ்பெஷலாக பாராட்டிய ராகுல்..!
- யாரு சாமி இவரு..! மனுசன் எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்துல பந்து போடுறாரே.. ஸ்பீடு எவ்ளோ தெரியுமா..?