டாஸ் வின் பண்ணதும் ‘தவான்’ செஞ்ச செயல்.. ‘மொத்த பேரும் சிரிச்சிட்டாங்க’.. தலைவன் எப்பவுமே ‘தனி ரகம்’ தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பின் ஷிகர் தவான் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டாஸ் வின் பண்ணதும் ‘தவான்’ செஞ்ச செயல்.. ‘மொத்த பேரும் சிரிச்சிட்டாங்க’.. தலைவன் எப்பவுமே ‘தனி ரகம்’ தான்..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 ஒருநாள் போட்டிகளில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

Shikhar Dhawan celebrating toss win with thigh five goes viral

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று (23.07.2021) கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர்.

Shikhar Dhawan celebrating toss win with thigh five goes viral

இதில் ஷிகர் தவான் 13 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க, பிரித்வி ஷா 49 ரன்களில் அவுட்டாகி அரைசதத்தை நழுவவிட்டார். இதனை அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து மனிஷ் பாண்டோ மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து வருகின்றனர். இதனிடையே திடீரென மழை குறுக்கிட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, டாஸ் வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான், தனது காலில் தட்டி விக்கெட் விழுந்ததுபோல கையை மேலே தூக்கி காட்டினார். இதனால் அருகில் இருந்த இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா மற்றும் மேட்ச் ரெஃப்ரி உள்ளிட்டோர் சிரித்தனர்.

ஷிகர் தவான் ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுத்தவுடன் இதேபோல் கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்