"அந்த ஒரு இன்னிங்ஸ்".. இனிமே எனக்கு டீம் -ல வாய்ப்பில்லன்னு தெரிஞ்சு போச்சு.. நம்பிக்கை தகர்ந்தது பற்றி பேசிய தவான்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பவர் ஷிகர் தவான். அது மட்டுமில்லாமல், சீனியர் வீரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஷிகர் தவான், கிரிக்கெட்டை தாண்டி வேடிக்கையான வீடியோக்கள், நடனங்கள் என சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவ் ஆகவும் இருந்து வருகிறார்.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | IPL 2023 : "இந்த தடவ நான் வரேன்". ஏலத்தில் போகாத போதும் ஸ்டீவ் ஸ்மித் சொன்ன விஷயம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்?

அது மட்டுமில்லாமல், ஃபீல்டிங் செய்யும் போது கேட்ச் எடுத்தால் உடனே தொடையில் தட்டி அதனை வித்தியாசமாக கொண்டாடுவது என ஷிகர் தவானின் பல விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவை ஆகும்.

அதே போல, வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ள 16 ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடும் ஷிகர் தவான், இந்த முறை கேப்டனாகவும் செயல்பட உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

ஐபிஎல் போட்டிகள் ஒரு பக்கம் இருந்தாலும் சமீப காலமாக இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கடந்த சில தொடர்களில் ஷிகர் தவானுக்கு பதிலாக ஏராளமான இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறுவதுடன் தொடக்க வீரர்களாகவும் களமிறங்கி ஆடி வருகின்றனர். அப்படி இருக்கையில், இது பற்றி ஷிகர் தவான் தற்போது மனம் திறந்து பேசி உள்ளார்.

"ரோஹித் ஷர்மா கேப்டன்சியை ஏற்ற பிறகு, அவரும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் எனக்கு போதுமான ஆதரவை அளித்தனர். நான் உலக கோப்பையில் ஆட போகிறேன் என்றும் கூறினார்கள். அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்த சூழலில் தான் மற்ற 2 பார்மட்டிலும் சிறப்பாக ஆடி வரும் சுப்மன் கில்லுக்கு ஒரு நாள் போட்டியிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் உருவானது.

Images are subject to © copyright to their respective owners.

அதை அவர் சிறப்பாக பயன்படுத்தி நன்றாக ஆடியதுடன் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையையும் அவர் பெற்றார். அதிலும் இஷான் கிஷன் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்ததுமே எனக்கு இனிமேல் அணியில் இடமில்லை என்பதை தெரிந்து கொண்டேன். அதற்கு முன்பு வரை வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது. இது எனக்கு மட்டுமல்ல, இதற்கு முன்பு பலருக்கும் நடந்துள்ளது. அதனால் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை" என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Also Read | விராட் கோலியை முதலில் பார்த்ததும் தப்பா புரிஞ்சுகிட்ட ஏபிடி.. பின்னர் தெரிய வந்த உண்மை.. சுவாரஸ்ய பின்னணி!!

CRICKET, SHIKHAR DHAWAN, ISHAN KISHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்