2 வருஷத்துக்கு அப்பறம் மகனுடன் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா பெருநோய் ஒட்டுமொத்த மனித குலத்தையே அசைத்துப் பார்த்திருக்கிறது. நோய் பரவல், பாதிப்பு, லட்ச கணக்கில் பலியான உயிர்கள் என கொரோனா ஒரு மறக்க முடியாத வாழ்க்கை தருணங்களை பலருக்கு ஏற்படுத்திவிட்டது. இது ஒரு பக்கம் என்றால் கொரோனா காரணமாக வேலை இழப்பு, வறுமை என மற்றொரு புறம் மறைமுகமாக கொரோனா ஏற்படுத்திய பாதிப்பும் மிக அதிகம்.

Advertising
>
Advertising

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக உலகின் பல நாடுகள் விமானப் போக்குவரத்து தடைகளை அமல்படுத்தின. இதனால், தங்களது அன்புக்கு உரியவர்களை சந்திக்க முடியாமல் பலரும் தவித்து வந்தனர். ஆனால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு உயிர் இழப்புகள் கணிசமாக குறைந்தது. இதனால் பல நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பித்துள்ளன. இது பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர்களில் ஒருவர் தான் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவான்.

2 ஆண்டுகள் காத்திருப்பு

ஷிகர் தவானின் மகன் ஜோரோவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விமான போக்குவரத்தை தடை செய்தது. இதன் காரணமாக தனது மகனை சந்திக்காமல் 2 ஆண்டுகள் காத்திருந்து இருக்கிறார் தவான்.

ஒரு பக்கத்தில் கிரிக்கெட் போட்டிகளால் தவான் பிசி ஆனதால் இருவரும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தவானும் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், ஜோரோவர் இந்தியா திரும்பியிருக்கிறார். ஆகவே, தவன் அடுத்த சில மாதங்களுக்கு தனது மகனுடன் நேரம் செலவிட முடியும்.

நாடு திரும்பிய தனது மகனை தூக்கி முத்தமிட்ட ஷிகர் தவன் இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த வீடியோவில்," இரண்டு வருடங்களுக்கு பிறகு எனது மகனை பார்க்கிறேன்" என தவன் குறிப்பிட்டு உள்ளார்.

இரண்டு வருடங்கள் கழித்து தனது மகனை சந்தித்த போது, ஷிகர் தவன் அவரை அள்ளி அணைத்து முத்தமிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் கொரோனா பாதித்த தவான் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை.  எனினும் குணமடைந்த பின்பு 3வது போட்டியில் விளையாடினார். இதேபோன்று சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக, ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

CRICKET, COVID, வைரல்வீடியோ, கொரோனா, கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்