"கார் ஓட்டும்போது".. 3 வருஷத்துக்கு முன்னாடியே ரிஷப் பண்ட்-க்கு ஷிகர் தவான் கொடுத்த அட்வைஸ்.. கடைசில இப்படி ஆகிடுச்சேன்னு வருத்தப்படும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை விபத்தில் சிக்கியதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில் முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆடி இருந்தார். அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான T20 போட்டிகளுக்கான மற்றும் ஒருநாள் அணியில் அவர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புத்தாண்டுக்கு முன்னதாக தனது தாயை ஆச்சரியப்படுத்த ரிஷப் பந்த் பயணம் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மூன்று வருடங்களுக்கு முன்னர் ரிஷப் பண்ட்-க்கு கொடுத்த அறிவுரை வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இருவரும் விளையாடிய நேரத்தில் தவானை பேட்டி எடுக்கிறார் பண்ட். அப்போது, "எனக்கு ஏதாவது அறிவுரை கூறவேண்டும் என்றால் எதை கூறுவீர்கள்?" எனக் கேட்கிறார் பண்ட்.
இதற்கு பதில் அளிக்கும் ஷிகர் தவான்,"கார் ஓட்டும்போது கவனமாக இரு. எச்சரிக்கையுடன் காரை ஓட்டவேண்டும்" என சொல்ல பண்ட் சிரிக்கிறார். தொடர்ந்து "நிச்சயம் இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்" எனவும் பண்ட் சொல்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ ரசிகர்களிடையே பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி எஸ்.கே.சிங் அளித்திருந்த பேட்டியில், "அதிகாலை 5.30 மணியளவில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்துக்குள்ளானதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர் காரை தனியாக ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.ரிஷப், தனது உறவினர்களை சந்திப்பதற்காக ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தார். ரூர்க்கியை நோக்கி நர்சனுக்கு 1 கிலோமீட்டர் முன்னால் அவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.. பிரதமர் நரேந்திர மோடியின் உருக்கமான ட்வீட்..!
- கார் ஓட்டும் போது தூங்கிய ரிஷப் பண்ட்?.. விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல்!
- விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. உடல்நிலை & அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர் அளித்த தகவல்! முழு விவரம்
- RISHABH PANT: 6 இடங்களில் காயம்.. முழங்காலில் தசைநார் கிழிவு.. ரிஷப் பண்ட்டின் உடல்நிலை குறித்து BCCI அறிக்கை..
- விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்.. டிவைடரில் மோதி தீப்பிடித்த கார்.. அதிர்ச்சி சம்பவம்!!
- விமானத்துல சச்சின் ஏறியதும் பயணிகள் போட்ட கோஷம்.. சச்சின் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ..!
- "ட்ரைவர் அங்கிள் ஒரு நிமிஷம்".. தம்பிகளை காப்பாத்துறாங்களாம்😍.. சிறுமியின் கியூட்டான செயல்.. ஹார்டின்களை குவித்த வீடியோ..!
- “மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல..!!”.. அத்தனை சொந்த பந்தங்களையும் விமானத்துல கூட்டிட்டுப்போன மணமக்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!
- இரவு பகலாக தொடர்ந்து 12 நாட்கள் வட்டமடித்த செம்மறி ஆடுகள்..! ஷிப்ட் மாத்தி ரெஸ்ட் வேற.. ஆச்சரியத்தில் உறைந்த நெட்டிசன்கள்.!
- "அதெல்லாம் ஒண்ணுமில்ல பாஸ்".. ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய ரிஷப் பந்த் செஞ்ச தியாகம்.. ரசிகர்களை நெகிழ வைத்த வீடியோ!!