ஐபிஎல் கப் ஜெயிச்ச கையோட ‘மும்பை இந்தியன்ஸ்’ டிரஸ் போட்டே ‘பாகிஸ்தானுக்கு’ விளையாட போன வீரர்.. வைரலாகும் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் உடையுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கலந்துகொள்ள சென்ற வீரரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் 13-வது சீசன் சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி போல பாகிஸ்தானில் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சூப்பர் லீக் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதனை அடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ப்ளே ஆஃப் சுற்றுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை (14.11.2020) முதல் 17ம் தேதி வரை ப்ளே ஆஃப் சுற்றுகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்த முடிவு செய்துள்ளது.

இதில் கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஜால்மி, லாகூர் குவாலண்டர்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதில் கராச்சி கிங்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த 22 வயது பேட்ஸ்மேன் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் (Sherfane Rutherford) விளையாட உள்ளார்.

இவர் நட்ப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் சூப்பர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு அவர் சென்றார். விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரின் புகைப்படத்தை கராச்சி கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

அதில் அவர் மும்பை இந்தியன்ஸ் ஜாக்கெட் மற்றும் மாஸ்க் அணிந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் கராச்சி கிங்ஸ் அவருக்கு ஒரு டிராட் சூட்டை அனுப்பி இருக்க வேண்டுமா? என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்