காயத்தில் தவிச்ச புஜாரா.. கலங்கி நின்ன குடும்பத்துக்கு ஓடிச் சென்று உதவிய நடிகர் ஷாருக் கான்.. மனம் திறந்த புஜாராவின் தந்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி வீரரான புஜாராவிற்கு நடிகர் ஷாருக் கான் செய்த உதவி பற்றி மனம் திறந்திருக்கிறார் புஜாராவின் தந்தை அரவிந்த் புஜாரா.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. லிவிங் டுகெதரில் இருந்த வாலிபர் செஞ்ச பயங்கரம்.. விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்கள்..!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா. இதுவரையில் 99 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள புஜாரா 7021 ரன்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்களும் 3 இரட்டை சதங்களும் 34 அரை சதங்களும் அடக்கம். எந்த அணியாக இருந்தாலும், எத்தனை கடுமையான ஆடுகளம் என்றாலும் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் புஜாரா. கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமாகி இருந்தார் புஜாரா.

அந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் வைத்து நடைபெற்று வந்தது. அப்போது, புஜாராவுக்கு திடீரென தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த புஜாராவின் குடும்பம் அவரை உடனடியாக இந்தியா திரும்புமாறு கூறியிருக்கின்றனர். அப்போது, கொல்கத்தா அணியின் இணை தலைவர் நடிகர் ஷாருக் கான் முதல் ஆளாக உதவி செய்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

புஜாராவுக்கு தென்னாப்பிரிக்காவிலேயே அறுவை சிகிச்சை நடைபெறட்டும் எனவும் இந்தியாவில் இருந்து மருத்துவரை ஏற்பாடு செய்வதாகவும், அவருடன் குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானலும் தென்னாப்பிரிக்கா செல்லலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார் புஜாராவின் தந்தை அரவிந்த் புஜாரா.

இதுகுறித்து அவர் பேசுகையில்,"அவர் (புஜாரா) ராஜ்கோட்டிற்குத் திரும்பி வந்து அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் ஷாருக்கான், புஜாரா தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் சொல்வதில் லாஜிக் இருந்தது. ரக்பி வீரர்களுக்கு அடிக்கடி இந்த காயம் ஏற்படுவதால், தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை குறித்த அனுபவம் நிறைய இருந்தது."

Images are subject to © copyright to their respective owners.

"புஜாராவிற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, அவர் சிறந்த மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்று ஷாருக் நினைத்தார். அவர் டாக்டர் ஷாவையும் குடும்ப உறுப்பினர்களையும் தென்னாப்பிரிக்காவிற்கு விமானத்தில் அனுப்ப முன்வந்தார். என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. அதனால் நான் டாக்டர் ஷாவை தனியாக பயணிக்கச் சொன்னேன்.ஆனால் அவர் நானும் பயணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கான பணிகள் உரிய நேரத்தில் நடந்து முடியவே, அவருடன் நானும் தென்னாப்பிரிக்காவிற்கு பயணித்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Also Read | கல்யாணம் முடிச்சு ரயில் ஏறிய புதுமண தம்பதி.. பாதியிலேயே மணமகள் போட்ட பக்கா பிளான்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!

CRICKET, SHAH RUKH KHAN, PUJARA, IPL 2019, PUJARA FATHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்