ஐபிஎல் ஏலம்.. "என்ன உங்க டீம்'ல எடுத்துப்பீங்களா பாஸ்??.." முன்னாள் 'சிஎஸ்கே' வீரர் கேள்வி.. கிண்டலாக பதில் சொன்ன ராகுல், சாஹல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியில் ஆடிய இந்திய வீரர் கேட்கும் கேள்விக்கு கே எல் ராகுல் மற்றும் சாஹல் அளித்த பதில் தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

15 ஆவது ஐபிஎல் தொடர், இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் ஆரம்பமாகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்பாக நடைபெறும் மெகா ஏலம், பிப்ரவரி மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில்  நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், இந்த முறை அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள், புதிதாக சேர்க்கப்பட்டுள்து.

புதிய அணிகள்

மற்ற 8 அணிகள், 2 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள், மற்ற அணிகள் நீக்கிய வீரர்களின் பட்டியலில் இருந்து தலா 3 பேரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.


இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, கே எல் ராகுல், மார்க்ஸ் ஸ்டியோனிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரை ஒப்பந்தம்  செய்துள்ளது. இந்த அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார். மற்றொரு அணியான அகமதாபாத், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கவுள்ளார்.

களை கட்ட போகும் ஐபிஎல் ஏலம்

பத்து அணிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், மீதமுள்ள வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதே போல, கடந்த சில மாதங்களில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், அதில் சில முக்கிய வீரர்களை அணியில் சேர்க்க, நிச்சயம் அனைத்து அணிகளும் குறி வைக்கும் என்பதால் இரண்டு நாட்களும் ஐபிஎல் ஏலம் களை கட்டும் என்றே தெரிகிறது.

எனக்கு பட்ஜெட் இருக்கா?

இந்நிலையில், ஐபிஎல் ஏலம்  குறித்து இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூர், கே எல் ராகுல் மற்றும் சாஹல் ஆகியோர் பேசும் வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் செயல்படவுள்ளார். அவரிடம், ஷர்துல் தாக்கூர், 'என்னை உங்களின் அணியில் எடுக்க பட்ஜெட் ஏதேனும் போட்டு வைத்திருக்கிறீர்களா?" என கேட்கிறார்.

கடவுளுக்கு ஏது பட்ஜெட்

இதற்கு நக்கலாக பதிலளித்த ராகுல், 'உங்களுடைய அடிப்படை தொகையில் வேண்டுமானால் எடுத்துக் கொள்வோம்' என தெரிவித்தார். ராகுலின் பதிலுக்கு மறுகணமே பதிலடி கொடுத்த சாஹல், 'கடவுளுக்கு எல்லாம் என்ன பட்ஜெட்' என்று கூறினார். இது தொடர்பான வீடியோ ஒன்றை மற்றொரு இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் பதிவிட்டிருந்தார். வேறொரு கருத்தை பதிவு செய்ய ஷ்ரேயாஸ் போட்ட வீடியோவில், மூவரும் பேசுவது கேட்டதால், அதனை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
 


 

Lord Shardul

சமீப காலமாக, இந்திய அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த ஆல் ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் விளங்கி வருகிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில்,பந்து வீச்சை விட, சிறப்பாக பேட்டிங்கும் செய்திருந்தார். அவருக்கு இந்திய அணியில், 'Lord Shardul' என்ற பெயரும் உண்டு. இதனைத் தான் 'கடவுள்' என சாஹல் குறிப்பிட்டார்.

நீக்கிய சிஎஸ்கே

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஷர்துல் தாக்கூரை அந்த அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ளாமல் நீக்கியது. 


தற்போது அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால், நிச்சயம் சிஎஸ்கே உள்ளிட்ட பல அணிகள் அவரை எடுக்க போட்டி போடலாம் என தெரிகிறது.

KLRAHUL, CSK, SHARDUL THAKUR, CHAHAL, IPL AUCTION, LUCKNOW SUPER GIANTS, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்