அன்னைக்கு நடராஜனுக்கு நடக்கும்போது யாருமே தட்டிக்கேட்கல.. இப்போ மட்டும் ஏன் அதை கேட்குறீங்க..? நெத்தியில் அடிச்ச மாதிரி கேட்ட ஷர்துல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது பும்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து ஷர்துல் தாகூர் பகிர்ந்துள்ளார்.

அன்னைக்கு நடராஜனுக்கு நடக்கும்போது யாருமே தட்டிக்கேட்கல.. இப்போ மட்டும் ஏன் அதை கேட்குறீங்க..? நெத்தியில் அடிச்ச மாதிரி கேட்ட ஷர்துல்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்தன. இரு அணி வீரர்களும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டதால், அனைத்து போட்டியும் பரபரப்பாகவே காணப்பட்டது. அதிலும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுன்சர் மழை பொழிந்து இந்திய வீரர்களை அச்சுறுத்தினர்.

Shardul Thakur on James Anderson and Bumrah clash in Lord's Test

மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பார்த்து ஏதோ சொல்லி வம்பிழுக்க, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தொடர்ந்து பவுன்சர்களை வீசி பும்ரா பழி தீர்த்தார்.

Shardul Thakur on James Anderson and Bumrah clash in Lord's Test

இதுகுறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘லார்ட்ஸ் டெஸ்ட் விவகாரம் ஓவல் மைதானம் வரை வந்தது. ஆண்டர்சன் பும்ராவை நோக்கி ஏதோ தகாத வார்த்தையில் திட்டிவிட்டார். இதனை வீரர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர் கூறிய வார்த்தையை பொது வெளியில் சொல்ல முடியாது. அதன்பிறகுதான் நாங்கள் ஆவேசமடைந்தோம்.

வெளிநாட்டு மைதானங்களில் நம் வீரர்கள் மீது அதிகமான பவுன்சர் வீசப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நடராஜனுக்கு மிட்செல் ஸ்டார்க்கும், பேட் கம்மின்ஸும் பவுன்சர் மழை பொழிந்தனர். அவர்களுக்கு நன்றாக தெரியும், நடராஜன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடாதவர் என்று. அப்போது இதை யாராவது தட்டிக்கேட்டார்களா?

இப்படி இருக்கும்போது நாங்கள் மட்டும் எதிரணி வீரர்களுக்கு பவுன்சர்கள் வீசக்கூடாதா? யாரையும் திருப்திப்படுத்த நாங்கள் பந்துவீசவில்லை, வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகிறோம்’ என ஷர்துல் தாகூர் கூறினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது நடராஜன் மட்டுமல்லாமல் அஸ்வின், புஜாரா, வாசிங்டன் சுந்தர் என இந்திய வீரர்கள் பலரின் உடம்பை குறி வைத்தே ஆஸ்திரேலிய பவுலர்கள் பந்துவீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்