"இப்டி ஒரு டீம் எப்படி அவங்களுக்கு செட் ஆச்சு??.." மிரண்டு போன முன்னாள் 'சிஎஸ்கே' வீரர்.. எந்த டீம சொல்றாரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடரில் ஆடி வரும் அனைத்து அணிகளும், முற்றிலும் புது பொலிவுடன் இருக்கிறது.
இதற்கு மிக முக்கிய காரணம், இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம் தான். சில அணிகள், கடந்த ஆண்டு தங்கள் அணியில் ஆடிய வீரர்களை மீண்டும் தேர்வு செய்தாலும், பல புதிய வீரர்களையும் அணியில் இடம் பிடிக்கச் செய்துள்ளனர்.
அதே போல, யாரும் எதிர்பாராத வகையில், இளம் வீரர்கள் அதிகம் பேரும், சிறப்பாக ஆடி தங்களின் திறனை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை அணியின் ஸ்டார் வீரர்
இன்னொரு பக்கம், இரண்டு புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருவது, இன்னும் ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால், இரண்டு குழுக்களாக பத்து அணிகளும் பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவர், ஒரு ஐபிஎல் அணியை பார்த்து ஆச்சரியத்தில் மிரண்டு போயுள்ளார். சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் கடைசியாக ஆடி இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வினை அறிவித்திருந்தார்.
ஆச்சரியப்படுத்திய ஐபிஎல் அணி
சிஎஸ்கே அணிக்காக ஆடுவதற்கு முன்னர், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகளிலும் வாட்சன் களமிறங்கி உள்ளார். இதனையடுத்து, தற்போதைய ஐபிஎல் சீசனில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் தன்னை அதிகம் கவர்ந்த அணி எது என்பது பற்றி, வாட்சன் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எப்படி செட் பண்ணாங்க?..
"இந்த முறை என்னை அதிகம் ஆச்சரியப்படுத்திய அணி என்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் தான். மிகவும் சமநிலையுடன் கூடிய அணியை பெற்றுள்ள ராஜஸ்தான், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஒரு அணியாக ஒன்றிணைந்து ஆடி இருந்தது. அந்த அணியில் சஞ்சு சாம்சன், கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக ஆடிய தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர் மற்றும் சிம்ரான் ஹெட்மயர் உள்ளனர்.
ஹெட்மயர் ஒரு திறமையான பவர் ஹிட்டர். ட்ரெண்ட் போல்ட், அஸ்வின், கொல்கத்தா அணியில் ஆடி வந்த வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் பந்து வீச்சில் உள்ளனர். அவர்கள் தான் என்னை அதிகம் ஆச்சரியப்படுத்தி உள்ளனர். இப்படி ஒரு சிறந்த அணியை எப்படி உருவாக்கினார்கள் என்பதே எனக்கு புரியவில்லை" என மிரண்டு போய் வாட்சன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- யுவராஜ் சிங் 'Face' பண்ண அந்த ஒரு பால் தான்.. என் வாழ்க்கை'ய மாத்திடுச்சு.. நெகிழ்ந்து போன 'சிஎஸ்கே' வீரர்..
- ‘முதல் மேட்ச் தோல்வி’.. சிஎஸ்கே ப்ளேயிங் 11-ன மாத்துனா.. அந்த பையனுக்கு வாய்ப்பு கிடைக்க சான்ஸ் இருக்கு..!
- "நாம யாருங்குறது இந்த மேட்ச்-ல தெரிஞ்சிடும்".. அணி வீரர்களிடம் சொல்லிய ஷ்ரேயாஸ் அய்யர்.. பின்னணி என்ன?
- "எல்லாத்துக்கும் 'கவுதம்' அண்ணா தான் காரணம்.." ஒரே மேட்ச்'ல திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்.. 'சிஎஸ்கே' மேட்ச்'லயும் சம்பவம் 'Loading' போல
- லட்டு மாதிரி கெடச்ச வாய்ப்பு.. ‘KKR பண்ண பெரிய தப்பு’.. கடைசி நேர பரபரப்பில் பறிபோன வெற்றி..!
- "இந்த 4 டீம் தான் 'பிளே ஆப்' போகும்.." அதிரடியாக கணித்த சுரேஷ் ரெய்னா.. லிஸ்ட்'ல சிஎஸ்கே இருக்கா இல்லையா?
- ஜிம்மில் வொர்க் அவுட் மோட்.. “அடுத்த வருச IPL-ல பார்ப்போம்”.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டி20 லெஜண்ட்..!
- தினேஷ் கார்த்திக், மோர்கன் இருந்த டைம்'ல... அந்த பையன டீம்'ல சேக்காம வீட்லயே உக்கார வெச்சாங்க.. 'KKR'ஐ விளாசிய முகமது கைஃப்
- “இந்நேரம் நான் அங்க இருந்திருக்கணும்”.. “வீட்டுல இருந்து ஐபிஎல் மேட்ச் பாக்க வேதனையா இருக்கு”.. முன்னாள் சிஎஸ்கே வீரர் ஆதங்கம்..!
- ஐபிஎல் வரலாற்றில் வித்தியாசமான சாதனை.. ‘முதல்ல முகமது சிராஜ்.. இப்போ ஹர்ஷல் படேல்’.. அசத்தும் RCB வீரர்கள்..!