புதிய அணிக்காக விளையாடப்போகும் சிஎஸ்கே ஸ்டார் ப்ளேயர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேசத்தில் நடைபெற உள்ள பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தேர்வாகியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்களைப் போல வங்கதேசத்திலும் டி20 பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரைப் போலவே ஒப்பந்த முறையில் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாட வைக்கப்படுகின்றனர்.

அந்தவகையில் கடந்த இரண்டு சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக குல்னா டைட்டன்ஸ் என்ற அணியின் சார்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டிள்ளார்.

முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டி வரை சென்று மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக காலில் காயத்துடன் வாட்சன் கடைசி வரை போராடியது குறிப்பிடத்தக்கது.

CSK, KHULNA TITANS, WATSON, BPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்