"சிஎஸ்கே 'டீம்'ல இருக்குற அந்த ஒரு விஷயம்... 'ஆர்சிபி'ல சுத்தமா இருக்காது.." ஓப்பனாக சொன்ன 'வாட்சன்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசனுக்கான ஏலம், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் வைத்து நடைபெற்று முடிந்த நிலையில், எப்போது ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

இதில், கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஷேன் வாட்சன், அதன்பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான், பெங்களூர் மற்றும் சென்னை உள்ளிட்ட அணிகளுக்காக வாட்சன் ஆடியுள்ளார். அதிலும், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் கோப்பையை கைப்பற்றவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த வாட்சன், ஐபிஎல் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். 'ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த திறமையான வீரர்கள் மூலம் அந்த அணியில் இருந்த அனுபவம் சிறப்பாக இருந்தது. ஆனால், அந்த அணியில் அன்பு ரீதியிலான பிணைப்பு ஒன்றும் இருக்காது.


ஏனெனில், டியாகோ என்னும் நிறுவனத்தின் தலைமையால் அந்த அணி செயல்படும் நிலையில், அது ஒரு கார்பரேட் கம்பெனி போன்ற ஒரு அனுபவத்தைத் தான் கொடுக்கும். அந்த அணி நிர்வாகம், எந்தவொரு வீரர்களுக்கு இடையேயும் அன்பான பிணைப்பையும், உறவையும் ஏற்படுத்தாது.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நான் ஆடியதில் மிகச் சிறந்த அனுபவம் கிடைத்த அணிகளில் ஒன்று. எம்.எஸ். தோனியுடன் இணைந்து ஆடிய அனுபவங்கள் அருமையாக இருந்தது. முக்கியமாக, அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், நான் இதுவரை கண்டதிலேயே சிறந்த பயிற்சியாளர் ஆவார். அணி நிர்வாகம், கிரிக்கெட் அறிவு, வீரர்களின் திறமை என அவர் நன்கு புரிந்து வைத்திருப்பார்.

அது மட்டுமில்லாமல், அவருக்கும் தோனிக்கும் இடையேயான பிணைப்பு கச்சிதமாக இருக்கும். ஒட்டு மொத்தத்தில், சென்னை அணிக்காக ஆடியது, சூப்பர் கூல் அனுபவம்' என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து வாட்சன் நெகிழ்ந்து போயுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்